Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

D-Mart

2002ல மும்பையில தொடங்கிய ஒரு சின்ன கடை இன்னைக்கு இந்தியாவோட முக்கியமான ரீடெல் நிறுவனங்கள்ல ஒன்னு. இந்த வளர்ச்சிக்கு பின்னாடி ஒரு எளிய சிந்தனை இருக்கு. மும்பையில இருக்கிற பாய் பகுதியில் ஒரு தொழிலதிபர் தன்னோட முதல் டிமார்ட் கடையை ஆரம்பிக்கிறார். அப்போ அவருக்கு இருந்த ஒரே ஒரு தரமான பொருட்களை குறைவான விலையில கொடுக்கணும். ஆனா டிமார்ட்டோட உண்மையான வெற்றி ரகசியம் என்ன தெரியுமா?

மத்த கடைகளை விட குறைவான விலை. தினமும் தேவையான பொருட்களை மலிவா கொடுத்ததால மக்கள் கூட்டமா வர ஆரம்பிச்சாங்க. இந்த ஒரு ஐடியாதான் வளர்ச்சிக்கு அடித்தளமா அமைஞ்சது. மெதுவா பல நகரங்களுக்கு விரிவடைய ஆரம்பிச்சது. தேவையில்லாத செலவுகளை குறைச்சு, விலையையும் குறைச்சாங்க. இதனால மக்களோட நம்பிக்கை அதிகரிச்சு, டிமார்ட் அசுர வேகத்தில வளர ஆரம்பிச்சது. ஒரே ஒரு கடையில ஆரம்பிச்ச டிமார்ட் இன்னைக்கு இந்தியாவோட பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள்ல ஒண்ணா வளர்ந்துருக்கு.

குறைவான விலை பொருட்கள், மக்களோட நம்பிக்கை. ஆனா இதுக்கு பின்னாடி இன்னொரு பெரிய பிசினஸ் ரகசியம் இருக்கு. பல கடைகளுக்கான இடத்தையே சொந்தமா வாங்குனாங்க. இதனால நீண்ட கால வாடகை செலவு குறைஞ்சது. அந்த சேமிப்பும் பொருட்களை மழிவா விற்க உதவிச்சு. ஆனா டிமார்ட்டோட பயணம் அவ்வளவு சுலபமா இருக்கல. பெரிய பெரிய நிறுவனங்கள் ரீடெல் மார்க்கெட்டுக்குள்ள நுழைஞ்சாங்க. போட்டி அதிகரிச்சது. ஆனா டிமார்ட் மட்டும் தன்னோட பாதையை மாத்திக்கவே இல்லை. ஏன் தெரியுமா?

D-mart

போட்டிக்காக விலையை குறைச்சுக்கிட்டே போனா லாபமே காணாம போயிடும். அதிக விற்பனை மட்டும் போதாது. செலவை கட்டுப்படுத்தி சரியான விலையில விக்கிறதுதான் உண்மையான சாமர்த்தியம். மத்த நிறுவனங்கள் விளம்பரத்துக்கும் அலங்காரத்துக்கும் செலவு செஞ்சப்போ டிமார்ட் செலவுகளை கட்டுப்படுத்த கவனம் செலு பொருட்களை மொத்தமா வாங்கி குறைவான விலையில போட்டியில அவங்களோட மிகப்பெரிய பலமா மாறுச்சு.

இப்ப மொபைல்ல ஆர்டர் போட்டா மளிகை பொருள் வீட்டுக்கே வந்துடுது. ஆனா வேகமான டெலிவரிக்கு கிடங்கு ஊழியர் போக்கு வரத்துன்னு செலவு இருக்கு. அப்ப டிமார்ட் என்ன செய்யும்? ஆனா டிமார்ட் சும்மா இருக்கல. ஆன்லைன் விற்பனையிலயும் இறங்குச்சு. வீட்டிலிருந்தே ஆர்டர் பண்ண வசதி தந்தது. ஆனா இந்த முயற்சி வெற்றி அடைஞ்சதா டிமார்ட்டுக்கு அடுத்ததா ஒரு பெரிய சவால் வந்துச்சு. ஆன்லைன் ஷாப்பிங் வேகமா வளர ஆரம்பிச்சது. பிளிங்கிட், செப்டோ மாதிரி நிறுவனங்கள் நிமிஷங்கள்ல டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சாங்க. மக்களுக்கு வேகம் முக்கியமாச்சு.

இதையும் படியுங்க  இனி, வாட்ஸ்ஆப் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறலாம்.. வெளியானது அசத்தல் அறிவிப்பு..!

ஆன்லைன் வியாபாரத்தில ஒரு பெரிய சிக்கல் இருந்துச்சு. பேக்கிங் டெலிவரி செலவுன்னு எல்லாமே அதிகம். குறைவான விலையில வித்தும் லாபம் சம்பாதிக்கணும். இந்த சவாலை டிமார்ட் எப்படி சமாளிச்சது? இங்கதான் டிமார்ட் ஒரு அதிரடி முடிவு எடுத்துச்சு. லாபம் தராத ஆன்லைன் செயல்பாடுகளை குறைக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா அவங்களுக்கு முக்கியம் வெறும் வளர்ச்சி இல்ல. லாபத்தோட வளர்ச்சிக்குட்பட்டது. 10 நிமிஷ டெலிவரியை துரத்தாம குறைவான விலையில கவனம் செலுத்துச்சு. மொத்தமா பொருட்கள் வாங்குற

குடும்பங்களைதான் முக்கியமா நினைச்சாங்க. 2017ல டிமார்ட் ஒரு மிகப்பெரிய முடிவு எடுத்துச்சு. பங்குச் சந்தையில களம் இறங்குச்சு. முதல் நாளே பங்கு விலை அதிரடியா உயர்ந்தது. முதலீட்டாளர்களையே ஆச்சரியப்பட வைத்த அந்த சம்பவம் என்ன தெரியுமா? பங்கோட ஆரம்ப விலை வெறும் 299. ஆனா முதல் நாள் முடிவிலயே அது 641 ரூபாய்க்கு மேல உயர்ந்துச்சு. ஒரே நாள்ல இந்திய பங்குச்சந்தையே ஆச்சரியப்பட்டுச்சு.

இப்போ இந்தியாவோட ஷாப்பிங் பழக்கமே மாறிடுச்சு. ஒரு பக்கம் குறைவான விலைக்காக டிமார்ட்டுக்கு போற குடும்பங்கள் இன்னொரு பக்கம் நிமிஷங்கள்ல டெலிவரி கேட்கிற இளைஞர்கள் இந்த போட்டியில ஜெயிக்க போறது யாரு? ஆனா உண்மையான ட்விஸ்ட் என்ன தெரியுமா? எல்லாருக்கும் 10 நிமிஷம் டெலிவரி தேவையில்லை. சிலருக்கு வேகம் முக்கியம். பல குடும்பங்களுக்கு சேமிப்புதான் முக்கியம். அதுதான் டிமார்ட்டின் பலம். ஆனா டிமார்ட்டுக்கு இன்னொரு ஆபத்து இருந்துச்சு. கடையில பொருட்கள் விக்காம தேங்கினா முதலீடு முடங்கிடும். காலாவதியானா நஷ்டம் வேற.

அப்போ இந்த பிரச்சனையை எப்படி சமாளிச்சாங்க? டிமார்ட்டின் இன்னொரு ரகசியம் இதுதான். பொருட்களை வாங்கி அடுக்குறது மட்டும் போதாது. வேகமா விற்கணும். அப்போதான் முதலீடு திரும்ப வரும். ஆனா விலை குறைச்சும் லாபம் எப்படி? நீங்க டிமார்ட்ல 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினா 100ம் லாபமா? இல்லவே இல்ல பொருள் விலை சம்பளம், கரண்ட் பில்லு போக்கு வரத்துன்னு செலவுகள் போகும். அப்போ லாபம் எப்படி வருது?

இதையும் படியுங்க  "யார்டா என் நம்பர எடுத்தது? இனி அந்த கவலை வேண்டாம்! WhatsApp அதிரடி!"

அதிக அளவுல பொருட்கள் வாங்குறதால சப்ளையர்கள் கிட்ட நல்ல விலைக்கு பேச முடியும். வாங்குற செலவு குறைஞ்சா வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில கொடுக்க வாய்ப்பு கிடைக்கும். ஒர புது கடை திறக்க கோடிக்கணக்குல முதலீடு. ஆனா மக்கள் வரலன்னா பெரிய நஷ்டம். அதனால டிமார்ட்டுக்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கறது ரொம்ப முக்கியம். டிமார்ட் எங்க வேணாலும் கடை திறக்க முடியாது. மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கணும். இடத்தோட விலையும் கட்டுப்படியாகணும். தவறான இடத்தை தேர்ந்தெடுத்தா பெரிய முதலீடே ஆபத்தாகிடும். புது டிமார்ட் திறக்குறதுக்கே பெரிய முதலீடு தேவை.

கட்டிடம், ரேக்கு, பொருட்கள், ஊழியர்கள்னு செலவு தொடரும். ஒரு பொருள் கடைக்கு வர்துக்குள்ள எவ்வளவு செலவு தெரியுமா? டீசல், டோல், லாரி வாடகைன்னு செலவுகள் ஏறும். அதனால போக்கு வரத்த சரியா திட்டமிடுறதும் டிமார்ட்டுக்கு முக்கியம்.டிமார்ட்ல இன்னொரு மறைமுக செலவு இருக்கு. லைட், ஏசி, பிரிட்ஜ்ன்னு தினமும் கரண்ட் செலவு. விலை குறைவா விக்கணும்னா இப்படிப்பட்ட செலவுகளையும் கட்டுப்படுத்தணும். ஆனா கடை திறந்ததும்

மக்கள் வருவாங்களா அதுதான் உண்மையான சோதனை. ஒரு குடும்பம் ஒரே தடவை வாங்குறதை விட ஒவ்வொரு மாசமும் திரும்பி வாங்குறதுதான் முக்கியம். இப்படி பல குடும்பங்கள் வந்தா டிமார்ட்டுக்கு தொடர்ச்சியான விற்பனை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எப்பவும் ஒரே கடையில வாங்க மாட்டாங்க. பக்கத்து கடையில நல்ல சலுகை இருந்தா மாறிடுவாங்க. அதனால டிமார்ட் ஒவ்வொரு முறையும் நல்ல மதிப்பை கொடுக்கணும். ஒரே ஒரு முக்கியமான பொருள் இல்லாட்டியும் வேற கடைக்கு போயிடலாம்.

அதனால குறைந்த விலை மட்டும் இல்ல தேவையான பொருள் எப்பவும் கிடைக்கணும். ஆனா திடீர்னு லாரிகள் வராம நின்னுட்டா கடையில பொருட்கள் தீர்ந்து போகும். வாடிக்கையாளர்களும் ஏமாந்துருவாங்க. இவ்வளவு பெரிய சப்ளை செயின டிமார்ட் எப்படி சமாளிக்குது? பலமே இங்கதான். பெரிய அளவுல பொருட்களை வாங்கி செலவுகளை கட்டுப்படுத்துறாங்க. அதனால குறைவான விலையில விக்க முடியும்.

இதையும் படியுங்க  மார்ச் மாதத்திற்குள் நடக்கப்போகும் விபரீதம்..! 55,000 இந்தியர்கள் உயிரிழக்க வாய்ப்பு..! வெளியான அதிர்ச்சி..!

ஆனா இதுக்கும் ஒரு ஆபத்து இருக்கு. மொத்தமா வாங்குறது நல்லதுதான். ஆனா வாங்கின பொருட்கள் விக்கலைன்னா பணம் கிடங்கிலேயே முடங்கிடும். அதனால எவ்வளவு வாங்கணும்னு கணிக்கிறதும் முக்கியம். கணிப்பு தப்புனா பழம், காய்கறி எல்லாத்துக்கும் ஆயுள் குறைவு. அதிகமா வாங்கினா வீணாகும். குறைவா வாங்கினா விற்பனை போகும். அதனால தேவைக்கேத்த ஸ்டாக் வைக்கிறதுதான் சவால். இதுக்குதான் முன்கூட்டியே திட்டமிடணும். பழைய விற்பனையை பார்த்து எந்த பொருள் எவ்வளவு தேவைன்னு கணிக்கணும். சரியான நேரத்துல ஸ்டாக் வந்தா விற்பனை தப்பாது. 2020ல வந்த கொரோனா எல்லாத்தையும் புரட்டி போட்டுச்சு.

ஊரடங்கு, போக்குவருத்து தடை, பொருள் தட்டுப்பாடு, டிமார்ட் எப்படி சமாளிச்சது? மக்களுக்கு பொருட்கள் தேவைப்பட்டுச்சு. ஆனா கடை நேர கட்டுப்பாடு, குறைவான வாடிக்கையாளர்கள், சப்ளை பிரச்சனை டிமார்ட்டோட வியாபாரமே பாதிக்கப்பட்டுச்சு. இதிலிருந்து எப்படி மீண்டாங்க? கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் அத்தியாவசிய பொருட்களை விற்று ஆன்லைன் சேவையையும் விரிவுபடுத்தி படிப்படியா மீண்டு வந்தாங்க. பெரிய விளம்பரம் மட்டும்தான் வெற்றிக்கு காரணமா?

D Mart

டிமார்ட்டுக்கு வாடிக்கையாளர்களோட நம்பிக்கையும் பரிந்துறையும் முக்கிய பலம். நல்ல அனுபவமே ஒரு விளம்பரமா மாறிடும். மளிகை பொருட்கள் மட்டும் இல்ல டிமார்ட்ல குறைந்த விலைக்கு அழகான உடைகளும் கிடைக்கும். குடும்பத்தோட ஷாப்பிங் பண்ணி பிடிச்ச பொருட்களைபட்ஜெட்டுக்குள்ள வாங்குற சந்தோஷமே தனிதான். டிமார்ட் வெளியில பாப்கார்ன், ஐஸ்கிரீம கவனிச்சிருக்கீங்களா?

குறைந்த விலை குழந்தைகளுக்கு சந்தோஷம். இந்த சின்ன விற்பனை ஷாப்பிங் அனுபவத்தையே இனிமையாக்குது.டிமார்ட்டோட இன்னொரு வசதி. பெரிய பார்க்கிங். கார்லயோ, பைக்லயோ வந்து மாசத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு சுலபமா எடுத்து போகலாம். ஷாப்பிங் அனுபவமும் முக்கியம்தானே. குறைந்த விலை நல்ல பொருட்கள் குடும்பத்தோட சந்தோஷமான ஷாப்பிங். ஒரு சின்ன கடையில தொடங்கி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வென்ற பயணம். இதுதான் டிமார்ட்டின் வெற்றிக்கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago

You missed