Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

El nino

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 55,000 பேர் உயிரிழக்கலாம் என அதிர்ச்சிகரமான கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

பசிபிக் பெருங்கடலில் நிகழும் இயற்கை நிகழ்வுகளை பொறுத்தே உலக வெப்பநிலையில் மாறுபாடுகள் நிகழ்கின்றன. இந்த நிகழ்வுகள் எல் நினோ என அழைக்கப்படுகின்றன. 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3° அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இதன் தீவிரத்தை உலகம் வறட்சியாகவும் பெரு வெள்ளமாகவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய விஷயங்களை கட்டாயமாக தவிர்ப்பதன் மூலம் எல்னினோவின் தாக்கத்திலிருந்து ஓரளவு நம்மை பாதுகாக்கலாம் என தொடர்ந்து ஆய்வாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனாலேயே பல நாடுகளின் அரசுகளும் எல் நினோ குறித்தும் அதன் தாக்கம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்ந்தறிய நிபுணர் குழுக்களை அமைத்து முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. பல பகுதிகளிலும் அதீத வறட்சி, அதீத வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ சம்பவங்கள் மற்றும் உணவு சங்கலியில் பாதிப்பு, உயிரினங்களிடையே பாதிப்பு ஆகியவற்றை இந்த சூப்பர் எல்நினோ ஏற்படுத்தும் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், மனித உயிர்களும் இதில் பறிபோகலாம் என்கின்றன ஆய்வுகள்.

இதையும் படியுங்க  "செல்போன் அடிமைகளுக்கு சவால்! 1000 நாட்கள் மலை ஏறும் நிஜ சூப்பர்மேன் கோபாலகிருஷ்ணன்!"

அந்த வகையில் கடந்த மாதம் வெளியான ஓர் ஆய்வில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் எல் நினோவால் உயிரிழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதேபோல கிளைமேட் இம்பாக்ட் லேப் வெளியிட்டுருக்கும் முடிவுகளில் அடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக 3,லடசத்து 73,000 பேர் வரை உயிரிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோவால் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் உலகின் தென்பகுதியில் அதிகமாக இருக்கும் என்றும், நைஜீரியாவில் மட்டும் 56,000 பேர் உயிரிழக்கலாம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. வெப்பத்தால் இந்தோனேசியாவில் 29,000 பேரும், பிரசிலில் 19,000 பேரும் உயிரிழக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை வரும் மார்ச் மாதத்திற்குள் 55,000 பேர் வரை உயிரிழக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதீத வெப்பம் காரணமாக பெரும்பாலும் இந்த மரணங்கள் மார்ச் மாதத்தில் நிகழும் எனவும் ஆய்வுகள் சொல்கின்றன. நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக வெளியாகி இருக்கும் கணிப்புகள் அதிர்ச்சியை கொடுக்கும் நிலையில் தொடக்கத்தில் மும்பையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளதாம். 1950க்கு பிறகு ஏற்படக்கூடிய வலுவான எல் நினோ பாதிப்பாக இது இருக்கும் என ஏற்கனவே உலக வானிலை அமைப்பு எச்சரித்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கணிப்புகள் மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளன.

இதையும் படியுங்க  அதிரடி மாற்றம்: இந்தியாவில் 95% குறைந்த ஊழல் புகார்கள்… CVC ரிப்போர்ட்: முதலிடத்தில் வங்கிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago

You missed