அடுத்து நடக்க போற இடை தேர்தலுக்கான வேலைகளை தவெக தொடங்கி விட்டது. குறிப்பாக விராலிமலை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திமுகவில் உள்ள ஒரு பெரிய தலையை இழுக்க செங்கோட்டையன் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தலுக்காக காத்திருக்கிற திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பா சமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் நல திட்டங்கள் பேரில் ஆளுங்கட்சி தேர்தல் வேலையை பார்க்க தொடங்கி விட்டது. அந்த வகையில் பெருந்துறையில் ஊழியர்கள் கூட்டம் போட்டியிருந்த அமைச்சர் செங்கோட்டையன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியிலும் கட்சி கூட்டங்களை நடத்த தொடங்கி இருக்கிறார்.

விராலிமலை முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தான் வேட்பாளர் என்பதையும் செங்கோட்டையன் கட்சி கூட்டத்தில் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய பிரமுகராக பார்க்கப்படுற புதுக்கோட்டை மன்னர் பரம்பரையை சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைந்தவர்.
எம்எல்ஏ-வாகவும் அவரை ஜெயலலிதா ஆக்கினார். கிட்டத்தட்ட 20 வருஷம் அதிமுகவில் இருந்த கார்த்திக் தொண்டைமான் அங்கிருந்து விலகி போன வருஷம் திமுகவில் இணைந்தார். ஆனால் திமுகவில் அவருக்கான மரியாதை இல்லை என்கிற மனப்புழுக்கத்தில் இருக்கிறார். அவரை தவெகவுக்கு அழைத்து வர விஜயபாஸ்கர் மூலம் செங்கோட்டையன் முயற்சி செய்கிறாராம். இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் கார்த்திக் தொண்டைமான் அநேகமாக முதல்வர் விஜய் முன்னிலையிலேயே தவெகவில் இணைந்து விடுவார் என செங்கோட்டையன் வட்டாரம் சொல்கிறது.
