Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

dhanush

காலியான எல்.முருகனின் எம்.பி., பதவி ரஜினி வீட்டுக்கா? தனுஷ் தரப்புக்கா என்கிற வியூகங்கள் டெல்லியில் உலா வந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் அண்மைக் காலமாக தமிழக அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசியல் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Dhanush

தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அண்மையில் கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நற்பணி இயக்கங்கள் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் தனித்தனி பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களை தொடங்க நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

தனுஷ் அரசியல் பற்றிய டெவலப்மென்ட்ஸ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டு பாஜகவுக்கு பொறுப்பாக இப்போது டெல்லியில் இருக்கிற ஒருவர் தனுஷின் செல்வாக்கு என்ன என்பது பற்றி ஒரு சர்வே எடுத்து பார்த்தாராம். அதில் எதிர்பார்த்ததை விட தனுஷுக்கு சாதகமான நல்ல செய்தி வந்திருக்கிறதாம். தனுஷ் கட்சியோட கட்டமைப்பு முழுக்க டெல்லியில்தான் நடக்கிறதாம். கட்சி ஆரம்பிப்பதற்கான பார்மாலிட்டி செய்து முடிக்கத்தான் தனுஷ் டெல்லி போனதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க  BREAKING: "3 டெண்டர்… ஒரே கம்பெனி… ₹1.76 கோடி மிச்சம்! CM ஆபீஸ் விவகாரத்தில் கோட்டையை அதிரவைக்கும் புது ட்ரெண்ட்!"
Republic Tamil

தனுஷ் டெல்லியில் இருந்த சமயத்தில் லதா ரஜினிகாந்தும் அங்கேதான் இருந்தாராம். இருவரின் டெல்லி விசிட்டுக்கு பின்னாலும் ஒரே காரணம்தான் இருக்கிறது என்பது டெல்லி வட்டார தகவல்களாக இருக்கிறது. இருவரும் டெல்லியில் இருந்த சமயத்தில் எல்.முருகன் ராஜினாமா செய்து காலியாக இருக்கிற ராஜ்யசபா சீட் பற்றியும் அங்கே ஆலோசிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கிறவர்கள் தனுஷ் அரசியலில் ரஜினியின் பார்ட் இருக்கும் என கணித்து சொல்கிறவர்கள் அதோட பலமாக இருக்கப் போவது
பாஜகதான் என்றும் கணிக்கிறார்கள். மொத்தத்தில் பாஜகவிடம் தமிழ்நாட்டுக்கு இன்னும் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 minutes ago at 2 minutes ago