Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Shanmugapriya

நானெல்லாம் பெரியார் பக்தன் என பேசிய அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்னர் சட்ட சிக்கலை போக்க மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவிலில் வழிபட்டார். அன்று தொடங்கி பகல் நேரங்களில் ஜோதிடர் அறிவுறுத்தலின் பெயரில் பச்சை நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்திருக்கிறார் அன்பில். ஆனால் தொடர்ந்து 10 நாட்கள் இப்படி ஆடை அணிந்தால் உங்கள் சட்ட சிக்கல் நீங்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் காவல்துறை முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அன்பில் மகேஷை கைது செய்திருக்கிறது. இது ஒரு புறம் என்றால் அன்பில் மகேஷ் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதை காட்டிலும் தற்போது அன்பிலுடன் இணைத்து பேசப்படும் ஷண்முக பிரியா விஷயம்தான் பெரிய அளவில் பேசு பொருளாக இருக்கிறது. ஷண்முக பிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு சென்றபோது அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. ஆனால் ஷண்முக பிரியா அதிகமாக பேசி இருக்கிறார்.

Anbil Mahesh

”நான் யார் தெரியுமா? இந்த ஆட்சி இன்னும் ஆறு மாதம் கூட நிலைக்காது. அடுத்து திமுக ஆட்சிதான். அன்பில் மீண்டும் அமைச்சராக வருவார். அப்போது உங்களுக்கு இருக்கு” என்று துணிச்சலாக அதிகமாக பேசியிருக்கிறார். இந்த நிகழ்வுகளை செல்போன் லைவ் மூலம் சென்னையில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஷண்முக பிரியா என்பவர்தான் அன்பில் மகேஷ் கொடுக்கும் பணத்தை வேறு வழிகளில் மாற்றக்கூடிய பினாமி என்று மத்திய குற்றப்பிரிவு பொலீசார் சந்தேகம் கொண்டிருக்கின்றனர். ஆனால் சண்முக பிரியா பேசிய தோரணை பணவரவுகளை தாண்டி வேறு ஏதேனும் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

இதையும் படியுங்க  வேணாம் தலைவரே.. பட்ட அவமானமே போதும்..! மு.க.ஸ்டாலினுக்கு ரெட் அலர்ட்..! தவெக-வால் ஜெர்க்..!

இந்த சூழலில்தான் உறுதிப்படுத்தாத தனிமனித விஷயம் என்பதால் ஊடகங்களும் பெரிதாக அன்பில் ஷண்முக பிரியா விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், சண்முகப்பிரியா வங்கி கணக்குகள் தொடங்கி அவரது குடும்பத்தினர் வங்கி கணக்கு குறிப்பாக முதலீடு போன்றவை எவ்வாறு வந்தது என சல்லடை போட்டு தேடி இருக்கிறார்கள். அதில்தான் ஆசிரியர் பணிமாறுதல் தொடங்கி, பணி உயர்வு வரை பல கோடி மதிப்புள்ள பணம் உள்ளே வந்திருப்பதாக தீவிர விசாரணை செல்கிறது.

Shanmugapriya

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க பெறப்பட்ட பணத்தை மனைவியிடமும், அரசு ஆசிரியர்கள் மாறுதல் பணத்தை ஷண்முக பிரியாவிடமும் பிரித்து தனித்தனி சாம்ராஜ்யம் நடத்தி இருக்கிறார் அன்பில் என்று இப்போது பல தகவல்கள் கசிந்து வருவது அன்பிலுக்கு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 minutes ago at 44 minutes ago