Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Theni Prison

தேனி மாவட்ட சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்திருக்கிறது. போலீஸ் நடத்திய அதிரடி வேட்டையில் 17 பேர் மறுபடியும் பிடிபட்டிருந்தாலும் இந்த 17 பேர் தப்பித்து ஓடுவதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த அந்த மாஸ்டர் மைண்ட் யார்?

இத்தனை கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியது தமிழக சிறைத்துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய படுகேவலம் என இந்த அரசு விமர்சிக்கப்பட்டாலும் இது தமிழகத்துக்கு புதிது அல்ல. 1989-ல் ஆட்டோ சங்கர் சென்னை சிறையிலிருந்து தப்பி ஓடி ஒடிசா மாநிலத்தில் பிடிபட்டார். 1991ல் வேலூர் மத்திய சிறையில ஆறாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த எட்டு ஆயுள் தண்டனை கைதிகள் தப்பி ஓடினார்கள். 1995ல சென்னை மத்திய சிறையிலிருந்து தடா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் ஒன்பது பேர் தப்பி ஓடினார்கள்.

அதே 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 43 பேர் தப்பி ஓடினார்கள். ஆனால் இவர்கள் சிறையிலிருந்து தப்பிக்கவில்லை. சிறப்பு தடுப்பு முகாமில் இருந்து எஸ்கேப் ஆனவர்கள். 2023 ஏப்ரல் 27ஆம் தேதி வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து ஏழு சிறார்கள் தப்பி தப்பி ஓடினார்கள். கடந்த அக்டோபர் 20, 21 தேதிகளில் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பினார்கள். ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாவற்றிலும் குற்றவாளிகள் தப்பி போனது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி மேற்கூரைரயை பிரித்து விட்டு போறது, லைட் கம்பத்தில் ஏறி காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, இல்லையென்றால் பார்க்க வந்த பார்வையாளர்களோடு கலந்து வெளியில் எஸ்கேப் ஆகுறது என யுத்திகளை கையாண்டார்கள்.

ஆனால் இந்த 17 பேர் தப்பியது இதுவரை தப்பிப்போன எந்த குற்றவாளிகளும் தீட்டாத ஒரு திட்டம். மனதில் எந்த ஒரு பயமும் இல்லாமல் முழுக்க முழுக்க கஞ்சா போதையில் தீட்டிய ஒரு திட்டம். கடந்த 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று இரவு சுமார் 10 மணி அளவில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பக்கத்தில் இருக்கிற தேக்கம்பட்டி மாவட்ட கிளை சிறையில தான் இந்த சம்பவம் நடக்கிறது.. இதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த நபர் யார்? என தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள். அந்த மாஸ்டர் மைண்ட் பற்றி பார்ப்பதற்கு முன் அன்று நள்ளிரவு அந்த சிறைக்குள் என்ன நடந்தது? இவர்கள் எப்படி தப்பிநனார்கள்?

தேனி கிளை சிறையில மொத்தம் நான்கு பிளாக்குகள் உள்ளன. அதில் 336 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதில் மூன்றாவது பிளாக்கில் மட்டும் கஞ்சா, திருட்டு மற்றும் கொலை வழக்கில் வந்த 90 விசாரணை கைதிகள் இருந்தார்கள். இதில் 17 கைதிகள் ஏற்கனவே தப்பிக்க வேண்டும் என பிளான் பண்ணி சிறையின் அந்த பாதுகாப்பு அம்சங்கள் அங்கே இருக்கிற கவனக்குறைவு எல்லாத்தையும் தெரிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு வாரமாக தப்பிப்பதற்கு முயற்சித்துள்ளார்கள். ஆனால், தனியாகப் போகாமல் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போக வேண்டும் என காத்திருந்துள்ளனர். அப்போதுதான் அந்த மாஸ்டர் மைண்ட் இவங்களுக்கு ஒரு பக்கா ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறான்.

இதையும் படியுங்க  "சென்னையே ஸ்தம்பிக்கப் போகும் அக்டோபர் 11! ஒரே மேடையில் பிரதமர் மோடி - CM விஜய்… சென்னை மக்களுக்குக் கிடைத்த செம குட் நியூஸ்!"

”இன்னைக்கு சிறையில ஸ்ட்ரென்த் கம்மி. ஒரே ஒரு வார்டன் தான் இருக்காரு. நீ திடீர்னு வலிப்பு வந்த மாதிரி கத்தி நடி. உன்னை காப்பாத்துவதற்காக ஒரு போலீஸ் உள்ள வருகிற போது அவரை பிடித்து அடிச்சிரணும். அடுத்து யார் வந்தாலும் அவங்களை அடிச்சிட்டு சாவி இருக்கிற இடத்துக்கு போய் அந்த மெயின் கேட்டை திறந்துறணும். கேட்ல இருக்கற அந்த போலீஸை ஒருத்தர், ரெண்டு பேர் இல்லாம மொத்தமா போய் அட்டாக் பண்ணிட்டு கேட்டை திறந்ததும் ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா எல்லாரும் ஓடிரனும்” என கச்சிதமாக அசைன்மென்ட் போட்டு தப்பிக்க வைத்திருக்கிறான். அதே திட்டப்படிதான் அக்டோபர் 26 இரவு 10 மணிக்கு மூன்றாவது பிளாக்கில் இருந்த முத்து இளங்கோவன் என்கிற அக்யூஸ்டு திடீரென வலிப்பு வந்தது மாதிரி கீழே விழுந்து பயங்கரமாக கத்த ஆரம்பிக்கிறான். அங்கே டியூட்டியில் இருந்த ஒரே ஒரு சிறைக்காவலரான சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன், கைதிக்கு நிஜமாவே உடம்பு முடியலையோ என நினைத்து அவசர அவசரமாக மெயின் சிறையின் கதவை திறக்கிறார்,

அவ்வளவுதான் சீன் ஓவர். கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடி உள்ளிருந்த மீனாட்சி சுந்தரம், லிங்க பிரசாத், ராஜா,
சிக்கந்தர், கருப்புசாமி, சிலம்பரசன், திருப்பதி, சபரிநாதன், பொன்முத்து செல்வம், பிரவீண், நிஜந்த், கார்த்திக் ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், முத்து இலங்கோ, ராஜு. இந்த 17 பேரும் பாய்ந்து வந்து காவலர் மதன்மோகனை போர்வையால் மூடி சராமரியாக தாக்குகிறார்கள்.

அதன் பிறகு அந்த மெயின் கேட் பாதுகாப்பில் இருந்த காவலர் தங்கபாண்டியையும் அடித்து தாக்குகிறார்கள். ஏற்கனவே சாவி எங்கே இருக்கிறது என நோட்டம் போட்டு வைத்திருந்ததால் அந்த சாவியை கைப்பற்றி மெயின் கேட்டை திறந்து ஆடு, மாடு மாதிரி 17 பேரும் சர்வசாதாரணமாக வெளியில் ஓடி அந்த இருட்டில் மாயமாக மறைகிறார்கள். இந்த கைதிகளின் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மதன்மோகன் மற்றும் தங்கப்பாண்டி இவர்களையும் அவசர அவசரமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையும் படியுங்க  "அரசியல் தகுதி அவ்வளவுதானா?" - முதல்வர் விஜய்க்கு கனிமொழி  சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் பதிலடி!

சம்பவத்தை கேள்விப்பட்டதுமே தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிரதாரி எஸ்.பி. பிரவீண் இருவரும் சிறைக்கு வந்து அதிரடியாக ஆய்வு நடத்த, தப்பி ஓடிய அந்த 17 பேரையும் பிடிப்பதற்கு 17 தனிப்படைகள் அமைக்கப்படுகிறது. சிறையை சுற்றி இருக்கிற 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளை உடனடியாக போலீஸ் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தீவிர தேர்தல் வேட்டை நடக்கிறது.

இதில் தப்பி ஓடிய கைதிகளில் பிரவீன் மட்டும் பிளான் பண்ணியபடி நம்ம ஈசியா எஸ்கேப் ஆயிடலாம் என நினைத்தவன் பாவம் அவனால் அவ்வளவு வேகமாக ஓட முடியவில்லை போல. போகும்போதே மூச்சு அடைக்குது. இந்த நிலையில் நம்மால் தப்பிக்க முடியாது என பயத்தில் மறுபடியும் சிறை அதிகாரிகள் முன்னாடியே வந்து சரணடைகிறான். கொஞ்சம் தம் கட்டி ஓடிய மேலும் நான்கு பேரால் அதன்பிறகு கொஞ்ச தூரத்துக்கு மேல் ஓட முடியவில்லை. பக்கத்திலயே எங்காவது மறைந்து விடலாம் என முயற்சி செய்த போது போலீஸாரின் அதிரடி சோதனையில் அடுத்தடுத்து அந்த நான்கு பேரும் பிடிபடுகிறார்கள்.

அதன் பிறகு அடர்ந்த வனப்பகுதியில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு நடத்திய தேடுதல் வேட்டையில் காட்டுக்குள் பதுங்கி இருந்த மேலும் எட்டு கைதிகளை வளைத்து பிடிக்கிறார்கள். மொத்தம் 15 கைதிகள் பிடிபடுகிறார்கள். கடைசியாக மீனாட்சி சுந்தரம் அவனுடைய சகோதரர் திருப்பதி இவர்கள் இருவரும் சரணடைகிறார்கள். ஆனால் அந்த கடைசி நபர் பிடிபடும் வரை போலீஸ் ஒரு பதற்றத்திலயே இருந்தார்கள்.

ஏனென்றால் போலீஸ் பட்ட அந்த பதற்றத்துக்கு முக்கிய காரணம் இவர்கள் 17 பேர் தப்பியது ஒரு பெரிய விஷயம் இல்லை. இந்த 17 பேரில் ஒருவனாக இருந்து வழிநடத்திய இந்த மாஸ்டர் மைண்ட் மீனாட்சி சுந்தரம் மற்றும் அவனோட சகோதரர் திருப்பதி. இவர்கள் இருவரும் முக்கியமாக தப்பி விடக் கூடாது என்பதுதான். யார் இந்த மீனாட்சி சுந்தரம்? இவன் சாதாரண கஞ்சா குற்றவாளி எல்லாம் கிடையாது. மதுரையை பல வருஷமாக இரத்த களறியாக்கி கொண்டு வருகிற வி.கே.குருசாமி மற்றும் ராஜபாண்டி இடையிலான பயங்கர கேங் வார் கொலையாளி.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், அரியமங்கலத்தை சேர்ந்த வி.கே.குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும், மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய ஒரு சிறிய மோதல்தான், இந்த அளவிற்கு வளர்ந்து பலர் பலியாவதற்கு காரணமாய் இருந்திருக்கிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக பழிக்கு பழி வாங்க, அடிதடி, வெட்டு குத்து என மாறி, குடும்பத்தையே கருவறுப்பேன் என சபதம் எடுக்கிற அளவுக்கு வந்து நின்றிருக்கிறது. உறவினர்களான இந்த வி.கே.குருசாமியும், ராஜபாண்டியனும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பக்கத்தில் உள்ள கரித்தெருவான் கிராமத்தை சேர்ந்தவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை எதுவுமே இல்லாததால் இருவருமே மதுரைக்கு இடம்பெயர்கிறார்கள்.

இதையும் படியுங்க  ''இனி, என் கணவர் விஜய் கூடத்தான் இருப்பேன்..! சமாதானமான சங்கீதா..! வெளியாகும் அந்த வீடியோ..!

இதில் வி.கே.குருசாமி திமுகவிலும் ராஜபாண்டி அதிமுகவிலும் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டுகிறார்கள். இருவருக்குமே வீடு காமராஜர் புரத்தில் தான் இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது மதுரையில் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டுவதில் இரு தரப்புக்கும் இடையில் முதன் முதலாக விரோதம் ஸ்டார்ட் ஆகுது. இந்த விவகாரம் ஒரு கோயில் திருவிழாவில் பெரிதாக வெடிக்க ராஜபாண்டியந் ஆதரவாளரும், உறவினருமான சின்ன முனுசு என்கிற முனுசாமியை வி.கே குருசாமியோட ஆட்கள் கொலை செய்கிறார்கள்.

இப்படி மாறி மாறி கொலைகள் அரங்கேறிக் கொண்டு இருக்கும் வேளையில்தான் அடுத்த கொலை முயற்சிக்கு திமுக ஆதரவாளரான வி.கே.குருசாமியின் வலது கரமும், முதன்மை ஆதரவாளனும் தான் இந்த மதுரையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம். இவன் மீது பல கொலை வழக்குகள் இருக்கிறது. ஒரு கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் வரை போய்விட்டு ஃபெயில் வாங்கி விட்டு வெளியே வந்தவன் திரும்பவும் ஒரு கேங்வார் பிரச்சனையில் சிக்கி தேனி சிறையில அடைக்கப்பட்டான்.

சிறைக்குள் வந்ததுமே இனி நமக்கு வாழ்நாள் முழுக்க ஃபெயில் கிடைக்காது. வெளியிலேயே போக முடியாது. உள்ளேயே கிடந்து சாக வேண்டியதுதான் என புரிந்து கொண்ட மீனாட்சி சுந்தரம் சிறையில் இருந்த கஞ்சா கேஸ் அக்யூஸ்ட்களுக்கு தன்னோட ஆட்கள் மூலமாக கஞ்சாவை சப்ளை பண்ணி பிரையின் வாஷ் பண்ணி அவர்களுக்கு தனித்தனியாக அசைன்மெண்ட் கொடுத்து இந்த மாஸ்டர் பிளானை போட்டு கொடுத்திருக்கான். மீனாட்சி சுந்தரம் தப்பிவிட்டான் என தெரிந்ததும் போலீஸ் இவ்வளவு பதற்றம் அடைந்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம் இருக்கிறது.

இவன் தப்பித்தது வெறும் ஜெயிலில் இருந்து தப்பிக்கிறதுக்காக மட்டுமில்லை. வெளியில் போய் தன்னுடைய எதிரி கோஷ்டியான வெள்ளைக்காளியை காலி பண்ணிவிட்டு வெளி மாநிலத்தில போய் செட்டில் ஆக வேண்டும் என்கிற விஷயத்துக்காகதான் இந்த ஸ்கெட்ச்சே போட்டிருக்கிறான். ஒருவேளை மீனாட்சி சுந்தரம் போலீஸிடம சிக்காமல் தப்பி இருந்தால் மதுரையில் மறுபடியும் ஒரு பயங்கரமான கேங்வார் வெடித்து வீதிகளில் இரத்த ஆறு ஓடி இருக்கும். எதிரி கோஷ்டியான வெள்ளைக்காளியையோ, அல்லது அவனுடைய முக்கிய ஆதரவாளர்களையோ கொடூரமான முறையில் கண்டிப்பாக போட்டு தள்ளி இருப்பான். தென்மாவட்டங்களில் மறுபடியும் ஒரு பெரிய சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், தொடர் பழிவாங்களும், கொலைகளும் அரங்கேறி இருக்கும். சிறைகளில் பணியாளர்களின் பற்றாக்குறை, பாதுகாப்பு குறைபாடு மற்றும் சப்ஜெயில்களில் உள்ள கண்காணிப்பு குறைபாடுகள் தான் இந்த சம்பவத்துக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago