https://republictn.com/

சென்னை முடிச்சூரில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரதராஜபுரத்தை சேர்ந்த பரத் மற்றும் ஜீனு ஆகிய இரு இளைஞர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “சரியான மேய்ப்பன் இல்லாமல் காவல்துறை தரிக்கெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், தற்போதைய தவெக அரசை “பொய்க்கால் குதிரை அரசு” எனவும் சாடியுள்ளார்.

“தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு மறந்துவிட்டதா?” என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை முடிச்சூரில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago