Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து விவகாரம், தற்போது பரஸ்பர குற்றச்சாட்டுகளாலும் அதிரடி வாக்குமூலங்களாலும் தமிழக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜெயம் ரவி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள இந்த உருக்கமான, காரசாரமான பேச்சு இந்த குடும்பப் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு தள்ளியுல்ளது.

தன் மீதான அவதூறுகளுக்கு செய்தியாளர்களிடம் விளக்கமத்துள்ள ரவி, தன் பிள்ளைகள் மீதான பாசத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும், குழந்தைகளைத் தன்னை பார்க்க விடாமல் தடுத்து வைத்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இத்தனை காலம் குடும்பத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தும் இன்று நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன், ஆனால் அவர்கள் சொகுசாக இருக்கிறார்கள். இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை புதிய திரைப்படங்கள் எதிலும் நடிக்கப்போவதில்லை. இனி வரும் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் போவதில்லை” என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  "கசப்பான நினைவுகளை டெலிட் செஞ்ச கெனிஷா… சிவபெருமான் பாடலுடன் தொடங்கிய 'புதிய அத்தியாயம்'!"

ஆர்த்தியுடனான திருமணம் குறித்துப் பேசிய ரவி, ”ஆரம்பமே மிரட்டலில் தான் தொடங்கியது. ஆர்த்தி பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு, பிளாக்மெயில் செய்தே என்னைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஆர்த்தியின் குடும்பத்தினர் என்னை ஒரு அடிமையைப் போல நடத்தினார்கள். என் குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசினாலோ அல்லது சீண்டினாலோ இனி சும்மா இருக்கப் போவதில்லை. “நான் சிவன் பிள்ளை, உண்மை என்ன என்பது அந்த கடவுளுக்குத் தெரியும். நான் தற்போது கெனிஷாவுடன் தான் இருக்கிறேன், அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்” எனக் கூறி, தன் மீதான விமர்சனங்களுக்குத் துணிச்சலாக முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago