தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவரை பிரிந்து தனது தோழி கெனஷாவுடன் இணைந்து வசித்து வருகிறார் ரவி மோகன். ஆர்த்தியுடன் வாழ விருப்பமில்லாததால் விவகாரத்து கோரியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், ”எல்லாருக்கும் வணக்கம். இன்று நான் உங்களுடன் சில தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். இதை ஒரு நேரடி பார்வையாளர்களிடம் பேசுவது போலவே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு நேர்காணல் போலவும் கருதலாம். இதற்கும் சினிமாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.
இதுவரை நான் பல விஷயங்களை வெளிப்படையாக பேசாமல் இருந்தது என் தவறாகவே நான் இப்போது உணர்கிறேன். நான் பொதுவாக அமைதியான குணம் கொண்டவர்; என்னிடம் எதுவும் சொன்னாலும் கேட்டு புரிந்து கொண்டு சமரசமாக நடக்கும் பழக்கம் கொண்டவன். ஆனால் தொடர்ந்து ஏற்படும் சில சூழ்நிலைகள் என்னை மனதளவில் பாதித்துள்ளன.
நான் நீண்ட காலமாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். பல வருட உழைப்பின் மூலம் என் பணியை நான் மேற்கொண்டு வந்துள்ளேன். எனது திரைப்படங்களில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. எனக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் அனைத்தும் என் உழைப்பின் பலனாகும் என்பதை நான் நம்புகிறேன்.
இன்று நான் சந்தித்து வரும் சில தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஏற்படும் விமர்சனங்கள் என்னை பாதித்துள்ளன. இதன் காரணமாக நான் தற்போது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நிலைமை சரியாகும் வரை, நான் திரைப்படப் பணிகளில் இருந்து இடைவேளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
இந்த முடிவு யாரையும் குற்றம் சாட்டுவதற்காக அல்ல. இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மனநிலையைச் சார்ந்த முடிவு. இதற்கும் திரைத்துறைக்கும் அல்லது மற்றவர்களுக்கும் தொடர்பில்லை என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நான் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை நிலைமை சரியாகும் வரை மற்றும் இந்தச் சூழ்நிலைகள் முடிவுக்கு வரும் வரை, நான் இந்த இடைவேளையில் இருப்பேன்” என்று தெரிவித்தார்.
