மதுராந்தகம், தாராபுரம் இந்த இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கும் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16 ஆம் தேதியோடு முடிவுக்கு வந்து விட்டது. ஆளுங்கட்சியான தவெக எதிர்கட்சியான திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டியாக சூடு கிளம்பி இருக்கிறது.
இந்த நிலைமையில்தான் இடைத்தேர்தல் களம் நமக்கு எப்படி இருக்கும் என விஜய் அரசு சார்பில் ஒரு சீக்ரெட் சர்வே எடுத்திருக்கிறார்கள். அந்த சர்வேயோட முதல் கட்ட ரிப்போர்ட்டை பார்த்ததும் கோட்டை வட்டாரத்தில் இருக்கிறவர்களுக்கு தலையே சுற்றி விட்டதாம். ஏனென்றால் ஏற்கனவே இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெற்றது. கடந்த 2026 தேர்தலில் மதுராந்தகத்தில் திமுக மூன்றாவது இடத்துக்கும் தாராபுரத்தில் விஜயோட தவெக மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது.

இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஆனாலும் இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் அதனால் இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என பெரிதாக எதிர்பார்த்து இருந்தார்கள் ஆனால், இந்த மூன்று மாதங்களில் அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவில்லையாம். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட அந்த கிராமத்து மக்கள் ”நாங்கள் ஏன் ஓட்டை மாத்தி போடணும். நாங்க போட்டது அதிமுகவுக்கு. ஆனால் இப்போ அவங்க அதிமுக வேட்பாளர் இல்ல தவெக வேட்பாளர்.
தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசினாங்க. இப்போ தனக்கு காரியமாகணும்னு இந்த ஓட்டு போட்ட மக்களை எல்லாம் உதாசீனப்படுத்திட்டு இப்ப விஜயை ஆதரிச்சிட்டு ஆளுக்கு ஒரு பேச்சு பேசுறாங்க. ஒருவேளை உங்களுக்கு தலைமை தான் பிரச்சனை அப்படின்னா தேர்தல்ல நிக்கறதுக்கு முன்னாடியே போய் அந்த கட்சியில சேர்ந்திருக்கணும். இல்லன்னா தேர்தல்ல நின்றுருக்கவே கூடாது. அதிமுக மற்றும் அவங்களோட கூட்டணி எல்லாம் சேர்ந்து அவங்களை நம்பி அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்போம்.

எம்எல்ஏ ஆன உடனே உங்களுக்கு தலைமை சரியில்ல அப்படின்னு பிச்சுக்கிட்டு கட்சி தாவுவீங்களா? உங்களை நம்பி உங்களுக்காக ஓட்டு போட்டோமே எங்க நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சீங்களா? நாலு மாசமா எங்க ஏரியாவுல என்ன நடக்குதுன்னு யாராவது எட்டி பார்த்தாங்களா? ஆளும் அரசு சார்ந்தவர்களும் வந்து என்ன எதுன்னு கேட்கல. சுயநலமா சிந்திச்சு அடைக்கலமானவங்களும் இந்த நாலு மாசத்துல என்ன நடந்துச்சுன்னு ஒரு கடமைக்கு கூட வந்து எட்டி பார்க்கல” என மக்கள் ஆத்திரம் கொள்ளத் ஆரம்பிவித்து விட்டார்கள்.
இதையெல்லாம் விட முக்கிய விஷயம் அந்த இரண்டு தொகுதிகளிலும் குடிதண்ணீர் பிரச்சனை, மின்வெட்டு, கரண்ட் பில் உயர்வு என நடுத்தர மக்கள் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் பயங்கர டப் கொடுக்கும் என்கிறார்கள். இதனால் ஆளுங்கட்சிக்கு நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. லண்டனில் இருந்து வந்ததும் விஜய் நேரில் சென்று இரண்டு நாள் பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் இந்த நிலைமையை மாற்ற முடியும் என உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது. இதனால் முதலமைச்சர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
