Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Preamalatha

தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தது ஸ்டாலினின் முடிவு? அதற்கு திருமாவளவனுக்கு ஏன் வருத்தம்? உங்களுக்கு அமைச்சர் கிடைச்சது, நீங்க தவெக கூட்டணிக்கு போயிருக்கீங்க. நாங்க ஏதாவது கமெண்ட் பண்ணினோமா?” என தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சகோதரர் திருமாவளவன் மீது மிகப்பெரிய மரியாதையை தேமுதிக வைத்திருக்கிறது. அது இன்னைக்கு இல்ல. நேத்து இல்ல. தலைவர் இருந்த காலத்திலிருந்தே அண்ணன் திருமாவளவன் மீது தேமுதிக மிகப்பெரிய ஒரு மரியாதை வைத்திருக்கிறது. அவருடைய வெளிச்சம் டிவி திறந்தபோது அதை திறந்து வைத்தது கேப்டன்தான். அன்னைக்கு எத்தனையோ தலைவர்கள் இருந்தாங்க. அந்த அளவு ரெண்டு பேரும் மனசார வாழ்ந்தாங்க.

Premalatha

சரி இன்னைக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதி தேமுதிகவுக்கு கொடுத்துட்டாங்க. அதனால நாங்க கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என அண்ணன் சொல்கிறார்னு நீங்க சொல்றீங்க. இதே அண்ணன் திருமாவளவன், அண்ணன் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாரும் சேர்ந்துதான் மக்கள் நல கூட்டணியை s2016ல் தொடங்கினாங்க. அதுக்கு பிறகு இதே அலுவலகத்தில் கேப்டனை வந்து சந்தித்து இந்த கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும். நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை சொல்லியவரும் அண்ணன் திருமாவளவன்தான்.

வார்த்தைகள் என்னைக்கும் மாறாது.. வரலாறும் மாறாது. நம்ம இஷ்டத்துக்கு வார்த்தைகளை மாத்தி பேசலாம், ஆனால் சொன்ன வார்த்தைகள் வரலாறாக பதிவாயிரும். அதை எந்த காலத்திலயும் மாத்த முடியாது. ஒரு சொல் வெளிய வர்றதுக்கு முன்னாடி அந்தசொல்லுக்கு எஜமான் நான். ஒரு சொல் வெளிய வந்துட்டா அந்த சொல்லதான் நமக்கான எஜமான். ஆகையால் அவர் கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராகவே ஏற்றுக்கொண்டவர்.

அன்றைக்கு மட்டும் அவர் எப்படி ஏத்துக்கிட்டாரு? இன்னைக்கு 10 சீட்டு கொடுக்கறதுனால நாங்க போறோம்னா இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருவேன். இது யாரும் ஹர்ட் பண்ணக்கூடாது என நான் ரொம்ப கவனமாக என்னுடைய வார்த்தைகளை நான் பயன்படுத்துகிறேன். அண்ணன் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபோது என் தொகுதிக்கு வந்து அவர் பிரச்சாரம் செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அவர் இன்னைக்கு வேணா மாத்தி பேசலாம். அதை நான் மறக்க மாட்டேன். யார் ஒருவர் செய்த ஒரு சின்ன உதவி கூட காலத்தால் நான் மறக்க கூடாது.

இதையும் படியுங்க  கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி… ஏழைகளுக்கு அபராதமா? எஸ்பிஐ கட்டணக் கொள்ளையைச் சாடும் மாணிக்கம் தாகூர்!

கனிமொழியும், திருமாவளவனும் தான் எனக்காக தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். நான் தமிழ்நாடு முழுக்க எவ்வளவோ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் போயிருக்கேன் உங்களுக்கு தெரியும். எனக்காக பிரச்சாரம் செய்த இவர்கள் இருவர். அதற்கு கனிமொழிக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் எங்களது ஆலோசனை கூட்டத்தில் நன்றிகளை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

Republic Tamil

அன்னைக்கு கூட சேலத்தில நடந்த ஒரு மீட்டிங்கில் நான் அண்ணன் திருமாவளவன் பேசும்போது எந்திரிக்கலனு ஏதோ சர்ச்சை எல்லாம் கிளப்ப பார்த்தார்கள். அவரு பேசிட்டு இருக்காரு. நான் கேஷுவல தான் இருந்தேன். இதையும் ஒரு சர்ச்சை ஆக்குனாங்க. ஏதாவதுசிண்டு பிடிக்கணும், ஏதாவது இந்த கூட்டணிக்குள்ள ஒரு குழப்பத்தை கொண்டு வரணும்னுலாம் எவ்வளவோ பிளான் நடந்தது. ஆனா அதை மிக அழகா டேக் பண்ணவர் அண்ணன் திருமாவளவன். ஏன்னா பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள் நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்.

சகோதரி பிரேமலதா அமர்ந்திருந்தது எந்த வகையிலும் தவறில்லை. காரணம் அன்றைக்கு முதல்வராக இருந்தவர்கூட்டணி தலைவர் அண்ணன் ஸ்டாலின் இருக்கும்போது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது அவர்தான். நான் இல்லை. இருந்தாலும் நான் முன்கூட்டியே அறிவிச்சது தப்புதான். அதனால் அவங்க கேஷுவலாதான் இருந்தாங்க. இதை நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தீங்கன்னா அது தப்பு. அவங்க அப்படி கிடையாது. அவங்க எப்பவுமே என்னோட சகோதரிதான் அப்படின்னு அவ்வளவு அழகாக
அதற்கு தெளிவா அவர் பதில் சொன்னார்.

இதையும் படியுங்க  மானஸ்தன் ஓடிட்டான்..! மானத்தை வாங்கிட்டார்… லதாவின் இயக்கத்தால் ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்..!

என்னுடைய விருதாச்சலத்திற்கு அவர் வந்தபோதும் அதற்கு நான் நன்றி சொன்னேன். ஒரு மிகப்பெரிய ஒழுக்கமான, மிக நேர்மையான ஒரு நபர் தான் அண்ணன் திருமாவளவன். இன்னைக்கு அவருடைய நிலைபாடு மாறினதுனால அவங்களுக்கு ஒரு அமைச்சர் கிடைத்ததுனால அவங்க வேற கூட்டணிக்கு போயிருக்காங்க. இதான் உண்மை. இத யாரும் மறைக்க முடியாது. இப்ப கம்யூனிஸ்ட் கூடதான் இருக்காங்க. வெளியே இருந்து ஆதரவு. எங்களுக்கு அமைச்சர் பதவி வேணாம்னு சொல்றாங்கல்ல. நீங்க சொல்ல வேண்டியதுதானே அதான் உண்மை.

எதுக்கு போறீங்க? சகோதரர் வன்னிய அரசு சட்டசபையில் எனக்கு நேராதான் உட்காருறாரு. அவரும் மரியாதை நிமித்தமா டெய்லி எனக்கு வணக்கம் சொல்லுவாரு. நானும் அவருக்கு வணக்கம் சொல்வேன். என்னை பொறுத்தவரைக்கும் எல்லாரும் அங்க சகோதரர்கள்தான். ஆனால் ஒரு பேச்சு என்று வந்தால் பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் கேட்கும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. அதனால நான் பதில் சொல்றேன். இல்லாட்டி இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால நான் சொல்றேன், அன்பு சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் கிடைச்சதால நீங்க கூட்டணி மாறுனீங்க.

communist

இதுதான் உண்மை. ஏன் கம்யூனிஸ்ட் மாதிரி நீங்க இருந்திருக்கலாமே? அப்போ நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. உங்களுக்கு ஜெயிச்சது ரெண்டு இடம். அதுல ஒருத்தர் அமைச்சர் என்றதுனால நீங்க போயிருக்கீங்க. இதுக்கு எதுக்கு தேமுதிகவை இழுக்குறீங்க? எதுக்கு இழுக்குறீங்க நான் கேட்கிறேன். முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அவங்க தலைமையும். அப்படி பார்த்தால் உங்களுக்கெல்லாம் கொடுத்த ரெண்டு ரெண்டு சீட்டு எக்ஸ்ட்ராதானே அண்ணன் ஸ்டாலின் கொடுத்திருக்காரு.

இதையும் படியுங்க  உள்ளாட்சியிலும் 'மைனாரிட்டி' ஆகக் கூடாது..! விசிக-விற்கு விஜய் கொடுத்த ‘பம்பர் ஆஃபர்’… அதிரும் அறிவாலயம்!

அதை நாங்க கேட்கலாம்ல்ல. அப்போ ஏன் நாங்க அதை பத்தி பேசல? அதனால நம்ம நிலைபாடு வேற ஒன்னை எடுத்துக்கிட்டு அடுத்தாள் மேல குற்றம் சொல்வது மிக மிக ஒரு தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார்னு நம்புறேன். இனிமேலும் அதை பத்தி அவர் பேச மாட்டார்னு நான் நினைக்கிறேன். அப்படி அவர் திரும்பவும் அதை பத்தி பேசினா அதை பத்தி ஐ ஜஸ்ட் டோன்ட் கேர். ஏன் சொல்றேன்னா குப்புற விழுந்துட்டேன் ஏன் மண்ணுல மீசையில மண்ணு ஒட்டலற கதைக்கு நான் போயிருவேன். அப்புறம் அதை பத்தி இக்னோர் பண்ணிருவேன். இதான் உண்மை. உங்களுக்கு அமைச்சர் கிடைச்சது, நீங்க போயிருக்கீங்க. நாங்க ஏதாவது கமெண்ட் பண்ணினோமா?

எதுக்கு தேமுதிகமேல மட்டும் எல்லாருக்கும் கண்ணு. எல்லாரும் காழ்புணர்ச்சியை ஏன் தேமுதிக மேல கொட்டறீங்க? அப்படி என்ன தேமுதிகவ பார்த்தால் பயம் என நான் கேட்கிறேன். தேமுதிகவை பார்த்தால் என்ன பயம்? எங்களுக்கு 10 சீட்டு கொடுக்கறாங்க, 20 சீட்டு கொடுக்கிறாங்க. அது கூட்டணி தலைமை எடுக்கிற முடிவு. அதை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதனாலதான் நீங்க கூட்டணி விட்டு போனீங்கன்னா இது உண்மைக்கு புறம்பான ஒரு பதில் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும்.

எனவே அமைச்சர் பதவி கிடைச்சது போனோம் அப்படின்றதுதான் உண்மை. நீங்க மாத்தி அதுக்கு பதில் சொன்னீங்கன்னா அது எப்படிப்பட்ட பொய் என்பது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக புரியும். இதான் என்னுடைய பதில்” என கொந்தளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago