Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

100 கோடி ரூபாய் பள்ளிகள் அங்கீகார ஊழலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்துகிற அதிரடி ரெய்டுதான் இப்போது தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக். முதலில் இந்த ஊழல் எப்படி வெளியில் வந்தது எனப் பார்த்தால் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகாரை கொடுக்கிறார். அதில் தமிழ்நாட்டில் இருக்கிற தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வாங்குவது பள்ளிகளோட தரத்தை உயர்த்துகிறது.

டிடிசிபி அனுமதி பெற்று தருவதாகச் சொல்லி பல கோடி ரூபாய் வசூல் பண்ணி ஏமாற்றி விட்டார்கள் என அதிர்ச்சிகரமான ஒரு புகாரை வைக்கிறார். இந்த புகாரை வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உடனே ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். இதில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் 59 வயதான பி.டி.அரசகுமார். இவர் முன்னாள் பாஜக மாநில துணைத் தலைவராக இருந்தவர். ஆனால் அவர் 201,9 2020 வாக்கில் பாஜகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.

PT Arasakumar

அதன் பிறகு திமுகவின் ஆதரவாளராவும், கட்சி தொடர்பான நிகழ்வுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்த பி.டி.அரசகுமார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அதன் நிறுவன தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். திமுகவில் இருந்த தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகளிடம் இருந்த அந்த தொடர்பையும் பயன்படுத்தி ”தனியார் பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் டிடிசிபி அனுமதி, பள்ளித் தர உயர்வு என எதுவாக இருந்தாலும் அந்த பிரச்சனையை நான் ஈசியா முடிச்சு கொடுக்கிறேன்” என தமிழகத்தில் இருக்கிற பள்ளி உரிமையாளர்களிடம் ஒரு நம்பிக்கையை விதைக்கிறார்.

இதையும் படியுங்க  இது மட்டும் நடந்தால்… ஜனவரிக்குள் தவெக ஆட்சி கவிழும்.. அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி!

அரரிடம் இருந்து அரசாணைகளையும் அதாவது ஜிஓவையும், அனுமதிகளையும் வாங்கி கொடுக்க பல கோடி ரூபாய்களை பள்ளிகளிடம் இருந்து வசூலித்து அதை அரசு, அரசு அதிகாரிகளுக்கும், துறை சார்ந்த இடங்களுக்கும் கைமாற்ற முக்கிய இடைத்தரகராக இருந்திருக்கிறார். ஆளுங்கட்சியின் நிகழ்வுகளிலும், அமைச்சர் வட்டாரங்களையும் இவருக்கு நேரடியாக கலந்து பேசுகிற செல்வாக்கு இருந்தது.

Anbil makesh

இவர்தான் இந்த ஊழல் நெட்வொர்க்கின் முக்கிய புள்ளியாக இருந்து செயல்பட்டிருக்கிறார். இவரை கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று சிசிபி போலீசார் அதிரடியாக தூக்கி ஜெயிலி தள்ளினர். அதுமட்டுமில்லாமல் இவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்கிறது. அரசகுமாரை பிடித்து விசாரணை நடத்தியபோது அடுத்தடுத்த முக்கிய நபர்கள் சிக்கியுள்ளனர். இதில் ஏ-2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் முத்துக்குமார் என்பவர் தான் இந்த பண பரிவர்த்தனைகளை கவனித்து கொள்வதற்கும், டிபிஐ அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களை ஒருங்கிணைக்கவும் செயல்பட்ட ஒரு முக்கிய ஏஜென்ட்.

இவர்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர். தலைவராக அன்பில் மகேஷ் இருந்தார். இப்போது முத்துகுமார் எங்கே இருக்கிறார் என்றால் வெளிநாட்டில் அன்பில் மகேஷ் தரப்பு செய்து கொடுத்த பாதுகாப்புடன் குடும்பத்தோடு வெளிநாட்டில் ரொம்ப பாதுகாப்பாக இருக்கிறார். இவரை மட்டும் ஏன் பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பினார்கள் என்றால் இந்த பண பரிவர்த்தனை ஆதாரங்கள் முழுக்க முழுக்க அவர் வசம் தான் இருக்கிறது.

அவர் சிக்கினால் இப்போது இவ்வளவு ரெய்டு எல்லாம் தேவையே இல்லை. அடுத்த நிமிடம் அன்பில் கைது செய்யப்படுவது உறுதியாகிவிடும். ஆகையால் அவரை பாதுகாத்து வருவதாக சொல்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டுமில்லாது இந்த ஊழல் கும்பலில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை சிசிபி போலீசார் அடுத்தடுத்து தூக்குகிறார்கள். ஒருவர் தனியார் பள்ளிகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கைமாற்றிவிட்ட இடைத்தரகர். இன்னொருவர் டிபிஐ தலைமை செயலக ஆவணங்களை போலியாக தயார் செய்து கொடுத்த அந்த உதவியாளர். இவர்கள் இருவரையும் கடந்த ஜூலை 12 ஆம் தேதி சிசிபி தனிப்படை போலீசார் கட்சிதமாக தூக்கி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

இதையும் படியுங்க  மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… வேட்பாளர் அறிவித்த ஆளும் தவெக.. யார் யார் தெரியுமா?

இங்கேதான் இந்த ஊழலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எப்படி சிக்கினார் என்கிற முக்கியமான சீனே வருகிறது. அரசகுமார் திமுகவில் இருந்த தனது அரசியல் நெருக்கத்தை பயன்படுத்தி அன்றைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் அலுவலகம் மற்றும் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கிடம் எல்லாம் தனது தொடர்பை பக்காவாக ஸ்ட்ராங் செய்கிறார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் டிடிசி அனுமதி மற்றும் பள்ளி தர உயர்வு வாங்கி தருவதாகச்சொல்லி 177 தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களிடம் ஏ-1 குற்றவாளியான அரசகுமார் மற்றும் ஏ-2 குற்றவாளியான முத்துக்குமார் வசூலித்த 100 கோடி ரூபாயில் கணிசமான பங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிஏ வாலாடி கார்த்திக் மூலமாக துறைரீதியான அனுமதிகளை விரைவுபடுத்த ப்ராசஸ் நடப்பதற்காக பல கோடி ரூபாய் கைமாறியதாகச் சொல்லப்படுகிறது.

சிசிபி டீம் தமிழ்நாடு முழுவதும் இறங்கி எடுத்த விசாரணையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் 250க்கும் மேற்பட்டவர்களிடம் சல்லடை போட்டு விசாரணை நடத்துகிறார்கள். முன்பு திமுக ஆட்சி நடந்ததால் இப்படி பணம் கேட்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த பள்ளி நிர்வாகிகள் எல்லாம் தவெக ஆட்சி அமைந்த பிறகு இதுதான் சான்ஸ் என எல்லா விவரங்களையும் கொட்டி தீர்த்து விட்டார்கள். அப்போதுதான் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து பல காரணங்களுக்காக அந்த பணத்தை சுருட்டி இருப்பது உறுதியாகிறது.

இதையும் படியுங்க  திமுக- அதிமுக ஒரே கட்சியாக வாய்ப்பு..! விஜயின் சுனாமி அலையால் தமிழக அரசியலில் பகீர் திருப்பம்..!
Anbil Mahesh

அதன் பிறகு அரசகுமார் குடும்பத்தின் 20 பேங்க் அக்கவுண்ட்ஸ், ஏ-2 குற்றவாளியான முத்துக்குமார் தொடர்புடைய 29 பேங்க் அக்கவுண்ட்ஸ் என மொத்தம் 49 வங்கி கணக்குகளை போலீசார் பிளாக் செய்தனர். அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கிற பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் அதாவது அந்த டிபிஐ வளாகத்துக்குள்ளேயே சிசிபி போலீசார் நேரில் சென்று பல கட்ட சோதனைகளை நடத்துகிறார்கள். அங்கிருந்து தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், கோடிக்கணக்கான பரிவர்த்தனை ரெக்கார்டுகள், மொபைல் கம்ப்யூட்டர்ஸ், ஹார்ட் டிஸ்க் என அத்தனை டிஜிட்டல் ஆதாரங்களையும் அப்படியே அள்ளிக்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், ஹார்ட் டிஸ்குகளில் இருந்த டிஜிட்டல் ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்கு மூலங்கள் கூடவே பேங்க் டிரான்சாக்சன் அனைத்தையும் ஆய்வு செய்தபோது அமைச்சராக இருந்த அன்பில் மகேஷுக்கு இந்த முறைக்கேடுகளிலும், நிதி பரிவர்த்தனைகளிலும் நேரடியான தொடர்பு இருப்பது அப்பட்டமாக அம்பலமாகிறது. உடனே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் சிசிபி போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று காலையிள் இருந்து சென்னை மற்றும் திருச்சியில் இருக்கிற முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நான்கு முக்கியமான இடங்களில் சிசிபி அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டு போயிருக்கிறார்கள். அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக் வீடுகளிலும் சோதனைகள் ரொம்பவே தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையே ஆட்டி படைத்த இந்த நூறு கோடி ஊழல் வழக்கின் விசாரணை இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அடுத்து சிறைக்கு செல்லும் எக்ஸ் அமைச்சர்களில் அன்பில் மகேஷ் கைது உறுதி என ஸ்ட்ராங்காக சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago