ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு முன்பு முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எம்.பி ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணை செயலாளர் ஆ. ராசா பேச்சு வன்மையாக கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று திமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசை கண்டித்தும், தமிழக அரசின் அமைச்சர்கள் மிசா குறித்து தவறான தகவல்களை கூறியதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்சாளருமான ஆ.ராசா ”எனக்கு சந்தேகம் இருக்கு. யாருக்கு பொறந்தனு?” “நல்ல நடிகனாக இருப்பதை விட, 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதை விட, குத்தாட்டம் போடுவதை விட, கொத்துப் பரோட்டா போடுவதை விட, முதலமைச்சராக இருப்பதை விட.. மனிதனாக இருங்கள்… மேடையில் ஒருமையில் முகம் சுழிக்கும் வகையில் பல்வேறு விஷயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ”திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்து கூறியது. திமுக தலைவர்கள் தொடர்ந்து சிலர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும், அதை கேட்டு தொண்டர்களும் ஆர்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. என கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவுபடுத்த எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவழியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்த கட்சி தலைமை கண்டிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் கண்ணியம் தவறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டுப்பாடு நிலை நிறுத்தம் கடமையை திமுக தலைவர் செய்வார் என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் இந்த கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
