Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ratheesh

‘ரத்தீஷ் நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் துபாயில போய் ஒழிஞ்சுக்கிட்டாரு” என ஆவேசமாக சட்டசபையில் முழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இத்தனை நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்ட அந்த ஒரு பெயர், இன்று சட்டசபையில் காரசாரமாக வெடித்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் யார் அந்த ரத்தீஸ் எனக் கேட்ட அந்த ஒரு வார்த்தைக்கு பின்னால் மொத்த தமிழ்நாட்டையே அதிர வைக்கிற பலநூறு ரகசியங்கள் ஒழிந்திருக்கிறது.

கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சரும், அவரோடு சேர்ந்து ஐஏஎஸ் ஆபீசர் உள்ளிட்ட அதிகாரிகள் சில பேரும் அந்த விஷயத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அது இல்லாமல் சில தவிப்பட்ட பேரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதில் ரத்தீஷ் என்பவரும் ஒருவர். அதிகாரிகளின் டிரான்ஸ்பர், குறிப்பாக டிஆர்ஓ லெவல் ஆபீசர்களின் டிரான்ஸ்பரை எல்லாம் முடிவு செய்திருக்கிறார். இவரை பற்றி சொல்கிறபோது ”சென்ட்ரல் ஃபிகர் ஆபரேட்டிங்ஸ் ஆத்தரைஸ்டு பவர் பிரோக்கர்” என அவ்வளவு பெருமையாக திமுகவினர் சொல்லிக் கொள்வார்கள். இந்த ரத்தீஷ் உத்தரவின் படிதான் திமுக ஆட்சியில் டாஸ்மாக் எம்டியாக இருந்த ஐஏஎஸ் ஆபீசரே செயல்பட்டார் என அமலாக்கத்துறை சொல்லி இருக்கிறது.

யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர்? தவெக அரசு வந்ததற்கு பிறகு இவரே துபாயில் போய் ஒழிந்து கொண்டார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் பெரிய பெரிய அமைச்சர்கள் கூட இவரை பார்க்க வேண்டும் என்றால் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் காத்து கிடக்க வேண்டிய நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல.. ரத்தீஷிடம் இருந்து போன் கால் வந்தது என்றால்கூட உடனே எழுந்து நின்று பேசுவார்களாம்.

இதையும் படியுங்க  திமுக-வை உதறித் தள்ளிய காங்கிரஸ்..! விஜய்யுடன் கைகோர்த்த ராகுல் காந்தி..! அறிவாலயம் அதிர்ச்சி..!

ஏன் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு பிடித்த இடங்களில் போஸ்டிங் வாங்குவதற்கு கோட்டைக்கு செல்லாமல் இவரை தேடி ஓடி வந்திருக்கிறார்கள். காரணம் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நிழல், நண்பர், காரியதரிசி எனச் சொல்லப்படுகிறவர் இந்த ரத்தீஷ் என்பதால் கோட்டைக்குள் எந்த ஃபபைல் நகர வேண்டும் என்றாலும், எந்த அதிகாரியை எங்கே தூக்கி மாற்ற வேண்டும் என்றாலும் இவர் பச்சைக் கொடி காட்டாமல் எதுவுமே அங்கு நடக்காது.

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆட்சியோட ‘ஒன் ஆப் த பவர் சென்டரே’ இவர்தான். இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் அமலாக்கத்ததுறை போய் அந்த டாஸ்மாக் எம்டி வீட்டை சோதனையிட்டார்களே, அப்போது குப்பைத்தொட்டியில் கிழிந்து கிடந்த சில வாட்ப்ஸ்-அப் பேப்பர்களை எல்லாம் எடுத்து ஒட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதில்தான் இந்த உலகமாக அதிர்ச்சி காத்திருந்தது.

எந்த பிராண்ட் மதுபானங்கள் வாங்க வேண்டும். யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும். அதாவது எரிக்கா பிளாட்டினம், எரிக்காபி ராண்டி, எரிக்கா விஎஸ்ஓபி இந்த பிராண்டுகளை மட்டும்தான் வாங்கவேண்டும் என அதிகாரிகளுக்கு நேரடியாக ஆர்டர் போடுகிற அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்க  ஃபேன்சி நம்பருக்கு மட்டும் முக்கியத்துவமா..? பார்த்திபனின் பராக்கிரமம்..! முதல்வருக்கு பறந்த ரிப்போர்ட்..!

ஆரம்பத்தில் இந்த ரத்தீஸுக்கு அன்பில் மகேஷ், உதயநிதி, சபரிசன், பிறகு அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகன் விகாஷ், தங்கமணியின் மகன் தரணிதரன், ஏன் இன்றைக்கு முதல்வர் விஜயோடு இருக்கக்கூடிய சில நெருங்கிய நண்பர்கள் வரைக்கும் எல்லாருமே கிரிக்கெட் விளையாடுகிற போது நண்பர்களாக அவருக்கு இருந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வேளச்சேரியில ஒரு ஸ்கூல் நடத்தி வருகிறார், அவரது எதிர்வீட்டில்தான் இந்த ரத்தீஷ் குடியிருந்தார். அதன் பிறகு எம்.ஆர்.சி நகரில் இருக்கிற ஒரு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கே இருக்கிற ரேடியோ ரூம் பாரில்தான் இவர்கள் அடிக்கடி ஒன்று கூடி எல்லாரும் சந்திப்பார்கள்.

Republic Tamil

இதில் இன்னொரு முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால் இவரது அண்ணன் சர்வஷ் ஐபிஎஸ் 2013ல்இ ருந்து மத்திய உளவு பிரிவான ரா என்கிற அமைப்பில் அமெரிக்காவில் இருந்தார். அவர் மீது வந்த சில குற்றச்சாட்டுகளால் அவரை இந்தியாவுக்கு வரவழைத்தார்கள். 2024ல மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தமிழக அரசு அவரை மாநில பணிக்காக எடுத்துக் கொண்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்தவர் 2025ல் திடீரென நீண்ட விடுமுறை எடுத்துவிட்டு மறுபடியும் அமெரிக்காவுக்கே சென்று விட்டார்.

இதையும் படியுங்க  அரசியலில் முதல்வர் விஜயை அண்ணாமலை அடிச்சுக் தூக்குவது உறுதி..! மூன்று முக்கிய காரணங்கள்..!

ஏனென்றால் சர்வேஷின் மனைவியும் அதே ரா அமைப்பில்ஒரு பெரிய அதிகாரியாக நேர்மையாக வேலை செய்கிறவர். இப்போது இந்த இருவருமே தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகிவிட்டார்கள். இப்படி அண்ணன் சர்வேஷ் மூலமாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் நட்பை ஏற்படுத்திக் கொண்டு திமுக ஆட்சியில் மட்டுமில்லாமல் கடந்த அதிமுக ஆட்சியிலும் பயங்கர பவர்ஃபுல்லாக வளம் வந்திருக்கிறார் ரத்தீஷ். அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டுவது, சிபிஐ இல்லையென்றால் ஈடி ரைடு வருவதற்கு முன்பே மேலிடத்திலிருந்து தகவலை வாங்கிக் கொள்வது என மொத்தத்தையும் தன்னுடைய கைக்குள்ள வைத்திருந்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் உதயநிதி, சபரிசன், அன்பி மகேஷ் பொய்யாமொழி இவர்கள் மூவருக்கும் நெருங்கிய நிழலாக மாறிவிட்டார். இப்படிப்பட்ட சமயத்தில் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததற்கு பிறகு ஒரு சம்பவம் நடக்கிறது.


அமலாக்கத்துறை அதிகாரிகள் இவரது சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் உள்ளே நுழைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சரியாக நள்ளிரவு விமானத்தைப் பிடித்து துபாய்க்கு எஸ்கேப் ஆகிவிட்டார் ரத்தீஷ். அவர் மட்டும் இப்போது இங்கே வந்து வாயை திறந்தார் என்றால் பல விஐபிகளின் அரசியல் வாழ்க்கையே காலி எனச் சொல்கிறார்கள். இதனால்தான் முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்கட்சியை சட்டசபையிலேயே வைத்து
செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago