Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுக எம்.பி.,யின் ஹோட்டலில் ஐ எம்.யூ.எல் எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ”எதிர்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு வெளியில் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் இஸ்லாமிய சகோதரர் இருக்கக்கூடிய எங்களுடைய கூட்டணி கட்சி ஐயுஎம்எல் கட்சியுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்கின்ற பதிவை செய்திருக்கிறார். இதை கடந்த இரண்டு நாட்களாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஒரு ஒரு உரையில் பேசியதை திரித்து தமிழகத்து வெற்றி கழகத்தின் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை செய்யக்கூடிய ஒரு பதிவை செய்து கொண்டிருக்கிறார். அவர் சொன்ன ஒரு பேட்டியை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எங்களுக்கு வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய ஒத்துழைப்புடன் காங்கிரஸ் காரிய காரிய கமிட்டி உடைய லெட்டர் கிடைச்சது. காங்கிரஸ் காரிய கமிட்டிய உடைய கூட்டணியில் கேரளாவில் ஐயூஎம்எல் இருக்கிறது. அந்த மதசார்பற்ற கொள்கைகளின் உறுதியாக எங்களுடைய தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற கருத்துடன் ஐயூஎம்எல் கேரளாவில் அமைச்சர் அவையில் பங்கெடுத்தவுடன் ஐயூஎம்எல் எங்களுடைய தலைவருடைய ஒப்புதலுடன், தலைவருடைய வழிகாட்டுதலுடன் ஐயூஎம்எல் கேரளா தலைவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நாங்கள் பேசினோம்.

இதையும் படியுங்க  தவெக- தொடங்கும் 2 டிவி சேனல்..! புஸ்ஸி ஆனந்துக்கு ஒண்ணு… ஆதவ அர்ஜூனாவுக்கு ஒண்ணு..!

அதன் பிறகு தமிழக தமிழ்நாட்டில் முதுப்பெரும் தலைவரா இருக்கக்கூடிய கட்சி தலைவருடன் நாங்கள் பேசினோம். அதன் பிறகு விசிகே, கம்யூனிஸ்ட் தலைவர்கள் அகில இந்திய தலைவர்களுடனும் நாங்கள் பேசினோம். எந்தவித சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலாளர்களோ, நாங்களோ எப்பொழுதும் பேசவில்லை. இந்த அரசு ஜனநாயகப்படி மக்கள் தீர்ப்பளித்ததை தலைவணங்கி காங்கிரசும் ஐயூஎம் எல், விசிக, கம்யூனிஸ்ட் அனைத்து தோழர்களும் ஜனநாயக பார்வையுடன் இந்த ஆட்சியை அமைத்திருக்காரே தவிர, குதிரை பேரத்தை நடத்தியது யார் என்று இப்போது அமைச்சருடைய உரையோ, சட்டமன்ற உரையோ அக்கார்ட் ஹோட்டலில் இந்த இரண்டு எம்எல்களை யார் தங்க வைத்தார்கள்? அந்த அக்கார்ட் ஹோட்டல் ஓனர் யார் என்பது தெரியும்.

ஜெகத் ரட்சகன் அவர்களுடையது, திமுக உடைய எம்பியோட ஹோட்டல். அப்ப அவங்களை தங்க வைச்சது யாருன்னு கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம். அப்பொழுது அதற்கு பின்பு யார் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் பார்வையில் வைப்போம். யார் குதிரை பேரம் நடத்தியது? திமுகதான் குதிரை பேரம் நடத்தியது.

இதையும் படியுங்க  தொங்கு சட்டசபை அமைந்தால்..? அதிமுக- திமுக வயிற்றில் கரையும் புளி..! அதிரடி ட்விஸ்ட்..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது சமூக வலைதளத்தில் மறைமுக தாக்குதல் நடத்துகிறார்கள். திமுக போல கோடிகளை கொட்டி அமைந்த சர்க்கார் கிடையாது. கோடிக்கணக்கான தமிழர்களின் வாக்கை வென்ற விஜய் சர்க்கார்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago