Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்பட போவதாக தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழ்நாடு ஆளுனர் அர்லேக்கர் கேரளாவுக்கு தான் ஆளுனராக இருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் கூடுதல் பொறுப்பாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால்தான் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்துக்குக் கூட அவர் கேரளாவில் டீ பார்ட்டி கொடுத்தார்.

முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு இருந்தும் இங்கே மத்திய அரசு இந்த சுதந்திர தினத்துக்கு ஆளுனர் டீ பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ்நாட்டை ஒரு பொருட்டாவே கருதவில்லை என விமர்சனங்கள் கிளம்பியது. தமிழ்நாட்டில் ஆள்கிற விஜய் அரசு மீது குதிரை பேரம் தொடங்கி பல புகார்களை எதிர்கட்சிகள் குறிப்பாக பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அதிமுக, அமமுக, தமிழக பாஜகவும் கூட ஆளுனர் வரைக்கும் திரும்ப திரும்ப கொண்டு சென்றார்கள். ஆனால் ரெகுலர் ஆளுனர் இல்லாததால் இந்த புகார்களுக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

இதையும் படியுங்க  இப்போ தான் தி.மு.க-காரனுக்கும் அறிவு வருதா..? பிச்சை எடுப்பதற்கு கட்சி நடத்தும்-காங்கிரஸ்..! சீமான் சரவெடி..!

இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் டெல்லி பாஜக மேலிடத்திற்கு தொடர்ந்து பிரஷர் போட்டு வருகின்றன. தமிழ்நாட்டுக்கு ரெகுலர் ஆளுனராக ஒருவரை நியமித்து அவர் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு நெருக்குதல் தர வேண்டும். இப்போதைய ஆளுனருக்கு விஜய் அரசு மீது இருக்கிற சீரியஸான புகார்களை எல்லாம் விசாரிப்பத்ற்குக் நேரம் இல்லை. அவரும் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் அலைந்து கொண்டே இருக்கிறார். இதனால் முழுநேர ஆளுனரை நியமியுங்கள் என பாஜக மேலிடத்திடம் கேட்டிருக்கிறார்கள்.

பாஜக தலைமைக்கும் இன்னொரு கணக்கு தீர்க்க வேண்டியது இருக்கிறது. என்னவென்றால் சமீபத்தில் 2029 பிரதமர் ரேசில் விஜய்க்கு மூன்றாவது இடம் என இந்தியா டுடே -சீ வோட்டர்ஸ் கொடுத்த ரிப்போர்ட் டெல்லியை கொஞ்சம் டென்ஷன் ஆக்கி இருக்கிறது. இது ஆரம்பத்திலயே கிள்ளி எரியவில்லை என்றால் ஆலமரம் மாதிரி வளர்ந்துவிடும் என்கிற அடிப்படையில்தான் தமிழ்நாட்டுக்கு புதிய முழுநேர ஆளுனரை நியமிக்க முடிவு செய்திருக்கிறது மத்திய
அரசு.

இதையும் படியுங்க  "கால் வச்சா சட்டியோட வச்சு கொன்னுடுவேன்!" - லீக்கான மிரட்டல் ஆடியோ; தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Republic Tamil

இதை வைத்துதான் கிரன் ரெட்டி ஆளுனராக வரப்போகிறார் என மீடியாக்களில் தகவல்கள் உலாவிக் கொண்டு இருக்கிறது. யார் வந்தாலும் சரி, தமிழ்நாட்டோட புதிய முழுநேர ஆளுனர் விஜய அரசுக்கு செம்ம நெருக்கடி தரணும் என்பதுதான் டெல்லி போடுகிற கணக்காக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago