இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா, “என்னையும் என்னுடைய மனைவியையும் விஷம் வைத்து கொன்று விடுங்கள்” எனக் கூறிய வீடியோ ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் பாலா, “பேசுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் துன்பப்பட்டு வருகிறேன். சட்டத்தின் பெயரால் ஒரு ஆண் துன்பப்படுகிறார். யாரால் என்று பெயரை நான் சொல்ல முடியாது.
அவர்கள் எதையும் சொல்லலாம். நான் ஒரு ஆண். நான் எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு சோகம் இருந்தாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு புன்னகைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஊடகங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், சில ஊடகங்கள் நல்ல காரியங்களை செய்கின்றன. பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் சில ஊடகங்கள் வியூஸுக்காக பொய்யான தகவல்களையும் பரப்புகின்றன. அப்படியான ஊடகங்களையே ஏமாற்றும் ஒருவர் கேரளாவில் இருக்கிறார் என்பது தெரியும், என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்று என் மனைவியின் பிறந்தநாள். இன்று காலை நாங்கள் குடும்பத்துடன் வைக்கம் சிவன் கோவிலில் இருந்தோம். என் மனைவி, அவளது தங்கை, என் மாமனார் மற்றும் சித்தப்பா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நான் எல்லா ஊடகங்களையும் அழைத்து உண்மையை வெளிப்படையாக சொல்வேன். அதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையலாம். இதற்கு மேல் என்னால் முடியவில்லை.
உண்மை வெளியில் வரக்கூடாது என்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்று விடுங்கள்,” எனவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
