Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

crime

சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் அஜித்(28). இவர் ஏர்டெல் நிறுவனத்தில் டென்னீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன் இரவு தாய், தந்தை மற்றும் குடும்பத்தார் கண்முன்னே அஜித் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற தாயக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் இரண்டு பெண்கள் உட்பட 4 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்தின் தயாரை மீட்டு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்க  “வாட்ஸ்அப் புகார் வந்தால் மட்டும் லஞ்சம் ஒழியுமா?” – தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் மற்றும் அபிஷேக் தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சிறைக்கு செல்ல அஜித் காரணம் என்பதால் அவர் மீது கொலை வெறியில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சகோதரர் அபிஷேக் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை காண ஹரீஷ் சென்றுள்ளார். அப்போது நீதிமன்ற வாசலிலேயே அஜித்தை கொலை செய்வோம் என சபதம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சபதம் எடுத்த அதே நாளிலேயே அதாவது அன்று இரவே அஜித்தை ஹரீஷ் மற்றும் போண்டா ராஜேஷ் கொலை செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை கண்முன்னே அஜித் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago