Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஐதராபாத் தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்த ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்கு, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே திருமணமான விபரத்தை மறைத்து பழகி வந்த நாகசாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணை தனிமையில் சந்தித்துள்ளார்.

இதில் கர்ப்பமடைந்த இளம்பெண், குடும்பத்தினருக்குத் தெரியவந்தால் பிரச்சனை உருவாகும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாகசாய் மருத்துவ ஆலோசனையின்றி அவருக்குக் கருத்தடை மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அந்த மாத்திரை சாப்பிட்டதும் இளம்பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழிகள் உடனடியாக அவரை நிஜாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை வழங்கியதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த காதலன் நாகசாயை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  “இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு மூவ்.. ரஷ்யாவுடன் நடந்த ரகசிய ஆலோசனை!”
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago