தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், நடிகர் அஜித்குமார் லண்டனில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில், தனது சொந்த பந்தய அணியான ‘அஜித் குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) மூலம் பங்கேற்க உள்ளார்.
லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசித்து, அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தமிழக அரசு சென்னையில் உலகத் தரம் வாய்ந்த ‘ஒலிம்பிக் சிட்டி’ மற்றும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ (Motorsports) உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதாக அறிவித்திருந்தது. இதற்கு நடிகர் அஜித்குமார் முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் இருவரும் நீண்ட காலப் போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், லண்டனில் முதலமைச்சர் விஜயும் நடிகர் அஜித்குமாரும் சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும், சமூக வலைதளங்களில் பலத்த ஹைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும் எனக் கூறப்படுகிறது. தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை அவர் பிரிட்டனில் தங்கியிருப்பார் எனத் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பிரிட்டன் செல்லும் நிலையில், அங்கு முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணத்தின் போது நடைபெறவுள்ள மற்றொரு முக்கிய நிகழ்வுதான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிட்டனில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி பங்கேற்க உள்ளது.

அஜித்குமாரும் அந்தக் கார் பந்தயத்தில் நேரடியாகக் களம் காண உள்ள நிலையில், அந்தப் போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்க்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டமிடல் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone Circuit) பந்தய மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த சர்வதேசக் கார் பந்தயம், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ‘மிச்செலின் லெ மான்ஸ் கப்’ (Michelin Le Mans Cup) போட்டியில் அஜித்குமார் தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.
செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணமும், அஜித்குமாரின் கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்குமார் சர்வதேசப் பந்தயத்தில் பங்கேற்கும் நிலையில், அவருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, புதிய ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்திருந்தார். தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல் என, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் விஜய்க்கு அஜித்குமார் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு தனது நண்பரும் நடிகருமான அஜித்குமாரின் கார் பந்தயத்தை நேரில் காண இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் இந்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருவரின் ரசிகர்களுக்கு இடையேயும் ஏற்கனவே அவ்வப்போது இணக்கமான சூழல் காணப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தால் அது மேலும் அந்த நட்புறவு சூழலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவைப் பொறுத்தவரை விஜயும் அஜித்குமாரும் நீண்ட காலமாக போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்டு வந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், லண்டனில் நடைபெறவுள்ள அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிடுவாரா, அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பாரா என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
