Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Single Mother

கணவன் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. இரண்டு பெண் பிள்ளைகள்… அவர்களின் எதிர்காலம்தான் வாழ்க்கை என்று பிடிமண் அரசு புறம்போக்கில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த அந்தத் தாயின் கனவு, இன்று அதிகாலை ஜே.சி.பி-யின் இரைச்சலில் மண்ணோடு மண்ணாகப் போனது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்கல்நத்தம் ஊராட்சி, கிணற்றுக் கொல்லை பகுதியில்தான் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சம்பூர்ணம். வயது சொல்லத் தெரியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டியிருக்கிறது. கணவர் இறந்தபோது கைக்குழந்தைகளாக இருந்த இரண்டு மகள்களையும் வளர்த்தெடுக்க, கூலி வேலை, வயல் வேலை என்று எந்த வேலையையும் விட்டுவைக்கவில்லை.

குடிசை வீடு… மழைக்கு ஒழுகும். வெயிலுக்கு அனல் கக்கும். இரவானால் விஷப்பூச்சிகளின் பயம். பருவ வயதில் இருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளை இப்படி ஒரு குடிசையில் வைத்திருக்க முடியுமா? தாயுள்ளம் துடித்தது.

“பிள்ளைகளுக்குப் பாதுகாப்பா ஒரு கூரை வேணும்…” – ஊர் ஊராகக் கடன் வாங்கினார். வட்டிக்கு வாங்கிய பணத்தில் செங்கல் செங்கல்லாக அடுக்கி, சிறிய கான்கிரீட் வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார். சுவர் எழும்ப எழும்ப, அந்தத் தாயின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்ததாகச் சொல்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

“இது அரசு நிலம்… இங்கே வீடு கட்டக்கூடாது!” என்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரிசங்கர் நேரில் வந்து எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. “ஐயா, பிள்ளைகளோட எங்க போவேன்… கொஞ்சம் இரக்கம் காட்டுங்க…” என்று சம்பூர்ணம் கதறியும் பலனில்லை.

இதையும் படியுங்க  If a vendor offers original-style packaging

இந்நிலையில், அக்.21 அதிகாலை, யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள், சம்பூர்ணம் கடன் வாங்கிக் கட்டிய அந்தப் புதிய வீட்டைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இடித்துத் தள்ளினர். கட்டி முடிக்கப்படாத சுவர்கள், கனவுகள் அனைத்தும் சரிந்து விழுந்தன.

இடிபாடுகளுக்கு முன்பு நின்றுகொண்டு, இரண்டு மகள்களையும் கட்டிப்பிடித்தபடி சம்பூர்ணம் போட்ட கூச்சல் அந்தப் பகுதியையே உறைய வைத்தது. “எங்க போவேன்… என் பிள்ளைகளை எங்க கூட்டிட்டுப் போவேன்?” என்ற அவரது கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை.

இது குறித்து வட்டாட்சியர் கௌரிசங்கரிடம் கேட்டதற்கு “

முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுத்தான் என் கடமையை செய்தேன் 

என ஒற்றை வரியில் பதில் அளித்தார் 

கடமை முடிந்தது… ஆனால், மனிதநேயம்?

கணவனை இழந்து, கடன் சுமையோடு பிள்ளைகளுக்காக ஒரு பாதுகாப்பான கூரையைத் தேடிய ஒரு தாயின் போராட்டம் இப்படி நிர்மூலமாக்கப்பட வேண்டுமா? அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு என்பது சட்டப்படி தவறு என்றாலும், 15 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வரும் ஆதரவற்ற விதவைப் பெண்ணுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதிகாலையில் வந்து இடித்தது சரிதானா? என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும். நிர்க்கதியாக நிற்கும் சம்பூர்ணத்தின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவச வீடு கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

கல் சுமந்த கனவு… ஜே.சி.பி-யால் நொறுங்கியது! நாட்றம்பள்ளி அருகே நள்ளிரவில் அரங்கேறிய அவலம்: இரு மகள்களுடன் நடுத்தெருவில் விதவைத் தாய்!

இதையும் படியுங்க  There are also butt plugs and strap-ons for hands-free anal

கணவன் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. இரண்டு பெண் பிள்ளைகள்… அவர்களின் எதிர்காலம்தான் வாழ்க்கை என்று பிடிமண் அரசு புறம்போக்கில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த அந்தத் தாயின் கனவு, இன்று அதிகாலை ஜே.சி.பி-யின் இரைச்சலில் மண்ணோடு மண்ணாகப் போனது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்கல்நத்தம் ஊராட்சி, கிணற்றுக் கொல்லை பகுதியில்தான் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சம்பூர்ணம். வயது சொல்லத் தெரியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டியிருக்கிறது. கணவர் இறந்தபோது கைக்குழந்தைகளாக இருந்த இரண்டு மகள்களையும் வளர்த்தெடுக்க, கூலி வேலை, வயல் வேலை என்று எந்த வேலையையும் விட்டுவைக்கவில்லை.

குடிசை வீடு… மழைக்கு ஒழுகும். வெயிலுக்கு அனல் கக்கும். இரவானால் விஷப்பூச்சிகளின் பயம். பருவ வயதில் இருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளை இப்படி ஒரு குடிசையில் வைத்திருக்க முடியுமா? தாயுள்ளம் துடித்தது.

“பிள்ளைகளுக்குப் பாதுகாப்பா ஒரு கூரை வேணும்…” – ஊர் ஊராகக் கடன் வாங்கினார். வட்டிக்கு வாங்கிய பணத்தில் செங்கல் செங்கல்லாக அடுக்கி, சிறிய கான்கிரீட் வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார். சுவர் எழும்ப எழும்ப, அந்தத் தாயின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்ததாகச் சொல்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

“இது அரசு நிலம்… இங்கே வீடு கட்டக்கூடாது!” என்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரிசங்கர் நேரில் வந்து எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. “ஐயா, பிள்ளைகளோட எங்க போவேன்… கொஞ்சம் இரக்கம் காட்டுங்க…” என்று சம்பூர்ணம் கதறியும் பலனில்லை.

இதையும் படியுங்க  விஜய்க்கு வெற்றி மேல் வெற்றி... தவெகவுக்கு நீதிமன்றம் கொடுத்த மிகப்பெரிய குட்நியூஸ்...!

இந்நிலையில், அக்.21 அதிகாலை, யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள், சம்பூர்ணம் கடன் வாங்கிக் கட்டிய அந்தப் புதிய வீட்டைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இடித்துத் தள்ளினர். கட்டி முடிக்கப்படாத சுவர்கள், கனவுகள் அனைத்தும் சரிந்து விழுந்தன.

இடிபாடுகளுக்கு முன்பு நின்றுகொண்டு, இரண்டு மகள்களையும் கட்டிப்பிடித்தபடி சம்பூர்ணம் போட்ட கூச்சல் அந்தப் பகுதியையே உறைய வைத்தது. “எங்க போவேன்… என் பிள்ளைகளை எங்க கூட்டிட்டுப் போவேன்?” என்ற அவரது கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை.

இது குறித்து வட்டாட்சியர் கௌரிசங்கரிடம் கேட்டதற்கு ” முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுத்தான் என் கடமையை செய்தேன்  என ஒற்றை வரியில் பதில் அளித்தார்  கடமை முடிந்தது… ஆனால், மனிதநேயம்?

கணவனை இழந்து, கடன் சுமையோடு பிள்ளைகளுக்காக ஒரு பாதுகாப்பான கூரையைத் தேடிய ஒரு தாயின் போராட்டம் இப்படி நிர்மூலமாக்கப்பட வேண்டுமா? அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு என்பது சட்டப்படி தவறு என்றாலும், 15 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வரும் ஆதரவற்ற விதவைப் பெண்ணுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதிகாலையில் வந்து இடித்தது சரிதானா? என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும். நிர்க்கதியாக நிற்கும் சம்பூர்ணத்தின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவச வீடு கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் நிற்பார்கள்… இடிந்த வீட்டின் செங்கல்கள் கண்முன் கிடக்கின்றன… இரண்டு பெண் பிள்ளைகளுடன் அந்தத் தாய் இனி எங்கே போவார்? .

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago