Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Sexual Harassment

அம்மா திட்டிட்டாங்கன்னு வீட்டை விட்டு போன பொண்ணுக்கு இப்படி ஒரு கதியா?” – தாலையூத்து காவல் நிலைய வளாகத்தில் அந்தத் தாயின் கதறல் அடங்கவே இல்லை. மகள் மீட்கப்பட்டாள் என்ற நிம்மதி ஒருபுறம்…

மூன்று நாட்கள் அந்த 15 வயது சிறுமி அனுபவித்த கொடுமைகளைக் கேட்டு உறைந்துபோனது மறுபுறம். ஆம்… மாளாத பாலியல் தொல்லைகள், புற்று ஈசல் போல கிளம்பும் இந்தக் கேடுகெட்ட நொறுக்கிகளை அடக்க முடியாமல், ஆழ்ந்த உறக்கத்தில் அரசு இருப்பதன் விளைவுதான் இது!

தேர்வுத் தோல்வியில் தொடங்கிய சோகம்!

திருநெல்வேலி மாவட்டம் தாலையூத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தேர்வில் தோல்வி… பெற்றோர் கண்டித்தனர். மனமுடைந்த சிறுமி அக்டோபர் 15-ம் தேதி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். பதறிப்போன பெற்றோர் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிவிட்டு, தாலையூத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் தேடத் தொடங்குவதற்குள், புற்று ஈசல் போல கிளம்பும் கேடுகெட்ட பொறுக்கிகளின் கையில் சிக்கியிருந்தார் சிறுமி.

இதையும் படியுங்க  11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை… சிக்கிய ஏடாகூட ஏட்டையா..!

ரயிலில் நம்ப வைத்து நாசம்!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, தனது ஆண் நண்பர் உட்பட 2 சிறுவர்களுடன் திருச்செந்தூர் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலிலேயே இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பெற்றோர் புகார் கொடுத்தது தெரிந்ததும், பயந்துபோன சிறுவர்கள் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சிறுமி கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு அனாதையாக விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

தசரா கூட்டத்தில் காத்திருந்த ஓநாய்கள்!

திருச்செந்தூரில் தனியாக நின்ற சிறுமியை மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (26), மணி (28), சண்முகசுந்தரம் ஆகியோர் நோட்டமிட்டனர். உதவி செய்வதுபோல் நடித்து குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் தெரிந்த உண்மை அதிர்ச்சி… திருவிழா கூட்ட நெரிசலில் திருட வந்த கும்பல் இது! கூட்ட நெரிசலுக்கு நடுவே, பொது இடத்தில் வைத்தே மணி என்பவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர் மணியும் சண்முகசுந்தரமும் தப்பிவிட, ”உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி கார்த்திக் சிறுமியை மதுரை வாடிப்பட்டியில் உள்ள தன் வீட்டிற்கு அக்டோபர் 16-ம் தேதி அழைத்துச் சென்று அங்கும் வன்கொடுமை செய்தான்.

இதையும் படியுங்க  With genuine luxurious gadgets getting costlier

அக்கம்பக்கத்து மக்கள் உதவியுடன் தப்பிய சிறுமி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தார். செல்போன் டவர், சிசிடிவி, முக அடையாள தொழில்நுட்பம் மூலம் தேடிய போலீஸார், அக்டோபர் 17-ம் தேதி சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

ஆழ்ந்த உறக்கத்தில் அரசு… தொடரும் அவலம்!

மணி, சண்முகசுந்தரம் போக்சோவில் கைது… கார்த்திக் திண்டுக்கல் வழக்கில் பிடிவாரண்டில் கைது… 2 சிறுவர்கள் மீதும் போக்சோ வழக்கு… கூர்நோக்கு இல்லம்… என நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால், கேள்வி அப்படியே நிற்கிறது.

ரயில் நிலையம், திருவிழாக் கூட்டம், பேருந்து நிலையம் என பொது இடங்களிலேயே சிறுமிகள் சூறையாடப்படுகிறார்கள் என்றால், பாதுகாப்பு எங்கே? மாளாத பாலியல் தொல்லைகள் தொடர்வதும், புற்று ஈசல் போல இந்தக் கேடுகெட்ட பொறுக்கிகள் கிளம்புவதும் நிற்காத வரை, ஆழ்ந்த உறக்கத்தில் அரசு இருந்து என்ன பயன்?

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 minutes ago at 46 minutes ago