Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜப்பானில் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு அந்நாட்டு மக்களின் பாரம்பரிய உணவுமுறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஜப்பானியர்கள் தங்களின் அன்றாட உணவில் அதிகளவில் காய்கறிகள், மீன், சோயா பொருட்கள் மற்றும் அரிசியைச் சேர்த்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில், சிவப்பு இறைச்சி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை மிகவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.

மேலும், உணவுகளை ஆழமாக எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக, ஆவியில் வேகவைத்தல், லேசாக வதக்குதல் அல்லது கொதிக்க வைத்து சமைக்கும் முறைகளையே அதிகம் பின்பற்றுகின்றனர். இதனால் உணவில் எண்ணெய் மற்றும் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் உணவுகள் பெரிய தட்டுகளில் பரிமாறப்படாமல், சிறிய கிண்ணங்களில் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. இதனால் தேவைக்கு அதிகமாக உண்பது தவிர்க்கப்படுகிறது. மேலும், “வயிறு 80 சதவீதம் நிறைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்” என்ற பாரம்பரிய வாழ்க்கைத் தத்துவத்தையும் ஜப்பானியர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

இதையும் படியுங்க  மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைப்பு..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் மற்றும் சோடா பானங்களுக்குப் பதிலாக, பச்சை தேநீர் அல்லது தண்ணீரையே அதிகமாக அருந்தும் பழக்கமும் அவர்களிடம் காணப்படுகிறது.

வாழ்க்கை முறையிலும் ஜப்பானியர்கள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர். சொந்த வாகனங்களை விட ரயில் மற்றும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதால், தினமும் கணிசமான தூரம் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் எடை இயல்பாகவே கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேபோல், குழந்தைகளை பள்ளிக்குச் காரில் அழைத்துச் செல்வதை விட, நடந்தே பள்ளிக்குச் செல்லும் பழக்கமும் ஜப்பானில் ஊக்குவிக்கப்படுகிறது.

இதனுடன், ஜப்பானில் “மெட்டாபோ சட்டம்” என்ற தனித்துவமான நடைமுறையும் அமலில் உள்ளது. இதன்படி, 40 முதல் 74 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் இடுப்பளவு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனையின் போது அளவிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், உடல் எடையைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிடுகையில், ஜப்பானில் உடல் பருமன் விகிதம் சுமார் 4 முதல் 6 சதவீதமாகவும், அமெரிக்காவில் சுமார் 43 சதவீதமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  ஜப்பானை விட்டு ஓடிடுங்க..! கடும் விதிமுறைகளால் கண்ணீர் விட்டு கதறும் இந்தியார்கள்..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago