தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு ஆதரவாக இணைத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் விஜய் தீவிர பிரச்சாரம் செய்யப் போகிறார். முதலமைச்சர் விஜயின் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படப் போகிற அந்த மெயின் பாயிண்டுகள் என்னென்ன? என பனையூர் வட்டாரத்தில் சீக்ரெட்டாக விசாரித்த போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் ரகசிய கூட்டணி வைக்க முயற்சித்தார். அது பிடிக்காமல்தான் அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிற தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வந்தார்கள்.
வேற எந்த காரணமும் இல்லை. இந்த திமுகவை எதிர்க்க தகுதியான ஒரே சக்தி தமிழக வெற்றிக்கழகம் மட்டும்தான். ஆகையால் நானே இங்கே வேட்பாளராக நிற்பதாக நினைத்து ‘உங்க அண்ணனா, உங்க தம்பியா, உங்க மகனா, உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு எல்லாரும் விசில் சின்னத்தில வாக்களியுங்கள்” என பிரச்சார மேடையில் அதிரடியாக பேச போகிறார் முதலமைச்சர் விஜய்.
அதே மாதிரி திமுகவுக்கு இப்போது காட்டுத்தீயாக எரிந்து கொண்டு இருக்கிற ஜெம் வீரமணி பஞ்சாயத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு சிறுமிகளை சீரழித்த சர்ச்சைக்குரிய வழக்காக கருதப்படுகிற இந்த ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் திட்டமிட்டு நீர்த்து போக வைத்திருக்கிறார்கள் என நாம் அன்று கணித்து சொன்ன மாதிரியே அந்த இரண்டு முக்கியமான விஷயங்களை மட்டும்தான் முன் வைத்து பிரச்சார களத்தில் ரொம்ப மாஸாக பேசினார் முதலமைச்சர் விஜய்.
கூடுதலாக சட்டமன்றத்தில் தான் பேசிய அந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தி தன்னுடைய தொண்டர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்தினார். கூட்டத்தில கலந்து கொண்டவர்களிடம் இருந்து ஒரே ஆரவாரமும் விசில் சத்தமும் விண்ணை பிளந்தது. ஆனால் அங்கே அந்த ஆரவாரம் செய்த மொத்த கூட்டமும் மதுராந்தம் தொகுதி மக்களா? எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை. முழுக்க முழுக்க தவெக தரப்பில் இருந்து கியூஆர் கோடு கொடுத்து ”நீங்க மட்டும்தான் உள்ள போகணும்” என பர்மிஷன் கொடுக்கப்பட்ட அந்த 5000 பேர் மட்டும்தான் அங்கே அனுமதிக்கப்பட்டார்கள்.
அதிலும் கடுமையான செக்கிங் செய்த பிறகுதான் உள்ளேயே அனுமதிக்கப்பட்டார்கள். கொடுமை என்னவென்றால் கியூஆர் கோடு வாங்கிய அந்த தொண்டர்களில் நிறைய பேர் அந்த கூட்டத்துக்கு வரவில்லை. திரண்டு இருந்த அந்த கூட்டத்தில் மதுராந்தகத்தை சேர்ந்த உள்ளூர் மக்களை விட வெளியூரில் இருந்து இறக்கப்பட்ட ஆட்கள்தான் அதிகமாக இருந்தது. ஆகையால் வழக்கமாக விஜய் கூட்டத்தில் இருக்கிற ஈர்க்கிற அலைக்கடல் கூட்டம் நேற்று அங்கே சுத்தமாக இல்லை என்பதுதான் நிஜம்.
பிரச்சார மேடை பக்கம் கூட்டம் கம்மியாக இருந்தது என பார்த்தால் விஜய் எப்போதுமே வழி நெடுகிலும் இருக்கிற மாஸ் வரவேற்பும் மதுராந்தகத்தில் பயங்கர மிஸ். முதலமைச்சர் ஆனதற்கு பிறகு முதல் முதலாக மதுராந்தகம் வருகிறார். கூட்டம் அலைமோதும் எனக் கணக்கு போட்டு சேலம் மாதிரியே மதுராந்தகத்தில் சாலையின் இரண்டு பக்கமும் பேரிகார்ட் எல்லாம் போட்டு அடைப்பாக வைத்திருந்தார்கள்.
ஆனால் அந்த பேரிகார்ட் எல்லாமே ஆளே இல்லாமல் செவனே என சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தது. பல இடங்களில் அதற்கு பக்கத்தில் வந்து நிற்கக் கூட ஆளே இல்லை. இதெல்லாம் பார்த்துக் கொண்டே காரில் வந்த விஜய் மதுராந்தகம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிற எம்ஜிஆர் சிலைக்கு மாலை, மரியாதை செலுத்தினார். ஆனால் அவர் போகிற வழியில் ஏரிக்கரை பக்கத்தில் அம்பேத்கர் சிலையும் இருந்தது. மதுராந்தகம் ஒரு தனித்தொகுதி என்பதால் கண்டிப்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவார் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், விஜய், அம்பேத்கரை கண்டுகொள்ளவேயில்லை.
தவிர்த்து விட்டு நேராக எம்ஜிஆர் சிலைக்கு மட்டும் மாலை போட்டு விட்டு போய்விட்டார். அதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்த எம்ஜிஆர் சிலையில் அவருடைய இரட்டை இலை சின்னத்தை காட்டுகிற அந்த கைப்பகுதியை வெள்ள துணியை போட்டு மூடி வைத்திருந்தார்கள். இதை பார்த்ததும் சோசியல் மீடியாவில் இருக்கிற
திமுக, அதிமுக நலம் விரும்பிகளும் இன்ப்ளுவயன்சஸ்ரும் ”ஏன் இந்த வேலை? இதெல்லாம் அசிங்கமா இல்லையா அவங்களுக்கு? ஒரு முதல்வர் செய்ற காரியமா? என கண்டபடி விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் அவர்கள் செய்கிற அந்த விமர்சனம் சுத்தமாக தவறான ஒன்றுதான். ஏனென்றால் மதுராந்தகம் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடக்க போவதால் அந்த ஏரியா முழுக்க தேர்தல் நடத்தை விதி விதிமுறைகள் அமலில் இருக்கிறது. அதனால்தான் தேர்தல் கமிஷனோட ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸஃபாலோ செய்து எம்ஜிஆர் சிலையோட கை பகுதியை துணியை வைத்து மூடி இருக்கிறார்கள். எம்ஜிஆர் சிலையில் இரண்டு விரல்களுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை காட்டுகிற மாதிரிதான் இருக்கும். தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுகிறவர்களை அட்ராக்ட் செய்கிற மாதிரியோ அல்லது விளம்பரம் செய்கிற மாதிரியோ எந்த ஒரு கட்சி சின்னமும் பொது வெளியில் தெரியக்கூடாது என ஒரு ரூல் இருக்ம்கிறது. அதனால்தான் தேர்தல் அதிகாரிகள் கையையும் சிலைக்கு முன்னாடி இருந்த இலை சின்னத்தையும் துணியை வைத்து மூடிவிட்டார்கள்.
இந்த எலக்சன் ரூல்ஸ் காரணத்தினால்தான் எம்ஜிஆர் சிலையில் கை துணியால் மூடப்பட்டிருந்த நிலையில் மாலை போட்டு மரியாதை செய்தாரே தவிர, தவெக தரப்பில் இருந்து இதை யாரும் மறைக்க வேண்டும் என பிளான் செய்து எல்லாம் பண்ணவில்லை” என்கிறார்கள்.
