Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முதல்வர் விஜயின் பர்சனல் கணக்கு வழக்குகளை இதுவரை பார்த்து வந்த ஆடிட்டரும், அமைச்சரமான வெங்கட் ராமன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விஷ்ணு ரெட்டியின் ஆதரவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இப்போது தமிழக முதல்வராக இருக்கிற விஜய், நடிகராய் இருந்த காலத்தில் இருந்து அவருடைய கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்கிற ஆடிட்டராக இருந்தவர் தான் இப்போது உணவுத்துறை அமைச்சராக இருக்கிற வெங்கட்ராமன். விஜயின் அப்பா சந்திரசேகர் காலத்தில் இருந்து விஜய் குடும்பத்துக்கே ஆடிட்டராக இருந்தவரும் இவர்தான். இப்போதும் தவெக கட்சியின் பொருளாளராகவும், அமைச்சர் வெங்கட்ராமன் இருக்கிறார்.

Venkataramanan

ஆனால் விஜய் முதல்வரான உடனே அவரை சுற்றி விஷ்ணு ரெட்டியோட ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்ததில் இருந்து விஜய் கூடவே இருந்த பழைய நபர்களை அவரிடம் இருந்து கொஞ்சம் தூரமாக தள்ளி வைக்கிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாவதாகவும் முதல்வரை சுற்றி ஒரு புது வட்டத்தையும் விஷ்ணு ரெட்டி அண்ட் கோ ஏற்படுத்தி இருப்பதாக ஆட்சி மேலிடத்தில் ஒரு பேச்சும் இருக்கிறது.

இதையும் படியுங்க  கரூரில் 41 பேர் பலிக்கு பழி..! அரெஸ்ட்டாகும் செந்தில் பாலாஜி..? அதிரடி வேட்டையில் ஐபிஎஸ் அதிகாரிகள்!"

இந்த நிலையில் தான் முதல்வருடைய கணக்கு வழக்குகள், அதிக நிதி புழங்குகிற துறைகளான கனிம வளம், டாஸ்மாக் மாதிரியான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிற இடத்தில் விஷ்ணு ரெட்டியால் நியமிக்கப்பட்டு இருக்கிற இன்னொரு ஜூனியர் ரெட்டி இருக்கிறாராம். இவர்தான் முதல்வருடைய பர்சனல் அக்கவுண்ட்களையும், பெரும் தொகை புழங்குற துறைகளுக்கும் முதல்வருக்குமான பாலமாய் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago