Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

முதல்வர் விஜய் அமைச்சரவை கூட்டத்தில் சில தரமான சம்பவங்களை செய்திருக்கிறார். அக்டோபர் 29 ஆம் தேதி
காலையில் 11 மணியிலிருந்து 12 மணி வரை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது. முந்தைய கூட்டங்களை விட இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ரொம்ப நேரம் பேசி இருக்கிறார். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு ஒப்புதல் உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் விவாதித்து முடித்தற்கு பிறகு அமைச்சர்களை பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்து ரொம்பவே ஸ்ட்ராங்கான குரலில் பேசி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

”நம்முடைய அரசோட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரணும். கடைக்கோடியில் இருக்கிற இந்த சாதாரண மனுஷன் வரைக்கும் நம்மளோட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரணும். மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இந்த இடைவெளி இருந்திடக்கூடாது. இத அமைச்சர்களாகிய நீங்க தான் கவனிக்கணும். அப்படி இடைவெளி இருந்தா அதை நீங்க தான் சரி செய்யணும். இந்த ரோடு பிரச்சனை, குடிநீர் தண்ணி பிரச்சனை அப்படின்னு இந்த பிரச்சனைகள் மக்களுக்கு நிறைய இருக்கிறதா எனக்கு தொடர்ந்து ரிப்போர்ட் வந்துட்டே இருக்கு.

இதையும் படியுங்க  விஜயின் பிம்பத்தை வட மாநிலங்களில் சுக்கு நூறாக உடைக்கும் பாஜக..! அட, இப்படியொரு வியூகமா..?
Vijay’

உங்களோட மாவட்டத்திலயும் நீங்க பொறுப்பு வகிக்கிற மாவட்டத்திலயும், இது மாதிரி மக்கள் பிரச்சனைகளை உடனடியா தீர்க்கணும். மறுபடியும் சொல்றேன் இந்த டெண்டர்கள்ல வெளிப்பட தன்மை இருக்கணும். ஊழல் இல்லாத ஆட்சியா அது இருக்கணும் அப்படிங்கிறதுதான் என்னோட உறுதியான நிலைப்பாடு. நீங்க யாரும் எதுக்காகவும் இதுக்கு ஆசைப்படக்கூடாது. பலவிதமான புகார்கள் எனக்கு வந்துட்டேதான் இருக்கு. அப்படி வராம பார்த்துக்க வேண்டியது உங்களோட பொறுப்பு. ஊழல்னு என்கிட்ட மறுபடியும் புகார்கள் ஏதாவது வந்துச்சு அப்படின்னா நான் யாரா இருந்தாலும் யோசிக்க மாட்டேன்” என அமைச்சர்களிடம் சராமரியாக வெடித்து தள்ளி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

ஒரு சில அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விஜய்க்கு ரொம்பவே புகார்கள் போயிருக்கிறது. துறைரீதியாவும் அவர்களுடைய செயல்பாடுகள் பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. அப்படிப்பட்ட சில அமைச்சர்களை மனதில் வைத்துதான் முதலமைச்சர் விஜய் இந்த கேபினெட் மீட்டிங்கில் இப்படி பொதுவாக பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago