Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளார். ”தலைவரே நம்ம மக்கள் இயக்கமா இருந்தப்போ எல்லா மாவட்டங்களையும் நலத்திட்ட உதவிகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தோம். தேர்தல் பரபரப்பால் அதை நம்ம சுத்தமா செய்யவே இல்லை. இப்போ ஆட்சிக்கு வந்துட்டதுனால கட்சி சார்பில் எல்லா மாவட்டங்களையும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குற விழாவை நடத்தணும்” எனகேட்க விஜயும் ரொம்ப ஆர்வமா விசாரிச்சு, அதுக்கு ஓகேன்னு சொல்லிட்டாராம். அதனால் விரைவிலேயே தவெக சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மாவட்டம் தோறும் நடக்கப்போகுகிறது என்கிறார்கள்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் முதல் முதலாக கோட்டையில் கம்பீரமாக தேசிய கொடி ஏற்றினார். வழக்கம் போல் இல்லாமல் கடற்கரை சாலை முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அலைமோதினார்கள். ஆனால், இந்த விழாவில் விஜய் மனைவி சங்கீதா விஜயுடன் ஒரு பப்ளிக் அப்பியரன்ஸ் கொடுப்பார்கள் என தவெக தொண்டர்கள் ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் சில வாரங்களுக்கு முன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்க  "பிரச்சாரத்துக்கே போகாம ஜெயிச்சது எப்படி?.. அதெல்லாம் வெறும் லக் தான்… அதிரடி காட்டிய ரோஜா!"

அத்தோடு மகன் ஜேசன் சஞ்சையும் டிடிக்கு கொடுத்த பேட்டியில் தந்தை விஜய் பற்றியும், தாய் சங்கீதா பற்றியும் ரொம்பவே உருக்கமாகப் பேசி இருந்தார். இதை பார்த்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ”அப்பாடா விஜய் குடும்பம் சீக்கிரமே ஒன்னு சேர்ந்துரும்” என மனதார நம்பினார்கள்.

அதனால்தான் இந்த விழாவில் விஜயோட மனைவி சங்கீதா ஒரு பப்ளிக் அப்பியரன்ஸ் கொடுப்பார் என தவெக தொண்டர்கள் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்குதான் சீனே தலைகீழாக மாறிவிட்டது. சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா திடீரென என்ட்ரி கொடுத்து பேரதிர்ச்சி கொடுத்தார். நல்ல கலகலன்னு சிரிச்ச முகத்தோடு படியேறி வந்து அதுவும் முதலமைச்சர் விஜயோட தாய் தந்தையான சோபா சந்திரசேகர் அவங்க உட்கார்ந்திருந்த அதே வரிசையில் சந்திரசேகருக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து விஜய் கொடியேற்ற அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் திரிஷா.

அந்த கொடியேற்றும் நிகழ்வில் அணிவகுப்பில் விஜய் திறந்த காரில் வந்து சல்யூட் அடித்து வந்தபோது, திரிஷாவும் அவரை பார்த்து சல்யூட் அடித்தார். நிகழ்ச்சி முடிந்து சிஎம் காரில் கிளம்பியபோது டாட்டா காட்டி உற்சாகப்படுத்தினார். ஆனால் இதன் பின்னணியில் நடந்த மேட்டர் என்னவென்றால் பொதுவாக இதுபோன்ற அரசு விழாக்களுக்கு பார்வையாளர்கள் அதாவது அந்த விருந்தினர்களை பிஆர்ஓ தான் தனித்தனியாக லிஸ்ட் தயார் பண்ணுவார். ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள் பிறகு முதல்வரோட சிறப்பு விருந்தினர்கள் அதாவது சிஎம் கெஸ்ட் லிஸ்ட் என சில கேட்டகிரி இருக்கிறது.

இதையும் படியுங்க  மக்களின் கவனத்திற்கு! 3 இலவச சிலிண்டர் பணம் உங்க அக்கவுண்டுக்கு வரணுமா? உடனே இத பண்ணுங்க!
Republic Tamil

இதில் சிஎம் கெஸ்ட் லிஸ்டில் சிஎம் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள் எல்லாம் கலந்துகொள்வார்கள். அதில் பிரெண்ட்ஸ் லிஸ்டில் தான் திரிஷாவோட பெயர் இருந்திருக்கிறது. ஆனால் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நேற்று சென்னையில் தான் இருந்தார். ஆனால் அவரோட பேர் அந்த லிஸ்டில் இல்லை. ஆனால் அந்த கெஸ்ட் லிஸ்டில் ஆரம்பத்தில் திரிஷாவோட பெயரே இல்லையாம். விஷயத்தை கேள்விப்பட்ட திரிஷா எனக்கு அழைப்பு இல்லையா? எனக் கேட்டு தானே முன் வந்து அந்த நால்வர் அணியில் முக்கியமானவரான ஜெகதீஷ் பழனிசாமியிடம் கேட்டு, ”நான் கண்டிப்பா இந்த விழாவில கலந்துக்கணும்” என வற்புறுத்தி இருக்கிறார்.

அதனால் உடனே ஜெகதீஷ் பழனிசாமியும் முதலமைச்சர் விஜயிடம் பேசி அவரை கன்வின்ஸ் செய்து திரிஷா பெயரை அந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு வழியாக குடும்ப பிரச்சனை முடிந்து சுபமாக எல்லாமே நடந்துவிட்டது என நினைத்த நேரத்தில் ”எங்களுக்கு இன்விடேஷன் அனுப்பாம திரிஷாவுக்கு ஸ்பெஷல் பாஸ் கொடுத்தத எங்களால தாங்கிக்கவே முடியல” என ஜேசன் சஞ்சய் மனம் நொந்து இருக்கிறார். ”எங்களை இன்வைட் பண்ணாதது கூட பரவாயில்ல. இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வச்சாச்சு”னு நினைத்திருந்த நேரத்தில் திரிஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஜேசன் சஞ்சயை இன்னும் வருத்தப்பட வைத்திருக்கிறது.

இதையும் படியுங்க  "பாமக-வுடன் ஒருபோதும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!" தவெக-வுக்கு விசிக வன்னி அரசு கொடுத்த அதிரடி 'செக்!
Republic Tamil

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ”இந்த நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகிட்டது விஜயோட அப்பா சந்திரசேகருக்கே கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதனாலதான் திரிஷா வந்து பக்கத்துல உட்கார்ந்ததுக்கு அப்புறமா கூட விஜய் முதல்வரா பதவி ஏற்றப்ப சந்திரசேகர் முகத்தில் இருந்த அந்த சந்தோஷமும் இந்த விழாவில் கொஞ்சம் கூட இல்லை. திரிஷா அவங்க குடும்பத்தை நோக்கி வரப்ப மட்டும் சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அப்புறம் அவரு பெருசா கண்டுக்கவே இல்ல” என்கிறார்கள்.

அதே போல விஜயோட மனைவி சங்கீதா வருவார் என காத்திருந்த தொண்டர்களுக்கு இது ஒரு பெரும் ஏமாற்றமாக அமைய, சங்கீதா அண்ணி வராமல் போன வருத்தத்தை விட, இங்கே திரிஷா வந்ததைத்தான் எங்களால் தாங்கிக்கவே முடியல என விஜயின் தீவிர தொண்டர்கள் இரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக புலம்பி தள்ளுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago