https://republictn.com/

சட்டசபை, கோட்டை செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு ராஜகுருவாக செயல்படுகிறார் செங்கோட்டையன் எங்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக செங்கோட்டையன் நடத்திய கிளாஸில் ஒரு மாணவராவே மாறிட்டாராம் விஜய். நம்பிக்கை வாக்கெடுப்வில் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஓட்டு போட வேண்டும்? என மாமல்லபுரத்தில் இருக்கிற ஒரு ரிசார்ட்டில் தவெக மற்றும் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு தவெக சார்பில் ஒரு வகுப்பு எடுக்கப்பட்டு இருகிறது.

இந்த வகுப்புக்கு செங்கோட்டையனால் சட்டசபை மாதிரியே பல பிரிவுகளாக பிரித்து எம்எல்ஏக்களை உட்கார வைத்து எப்படி செயல்படவேண்டும்?சபாநாயகர் என்ன பேசுவார் என ஒரு மாதிரி சட்டசபையை நடத்திக் காட்டினாராம் செங்கோட்டையன். விஜயும் உட்கார்ந்து ஒரு மாணவராக அந்த வகுப்புகளை கவனித்திருக்கிறார். அவை முன்னவராக இருக்கிற செங்கோட்டையனிடம் பேரவை செயல்பாடுகளை பற்றி கேட்டு முடிவு எடுக்கிறார் விஜய்.

இன்னொரு பக்கம் பனையூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சிலரை விஜய் பேச சொல்லி இருக்கிறார், அப்போது இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ, ”என் பிள்ளைகள் தவெகவுக்கு தான் ஓட்டு போட்டாங்க. நானும், என் மனைவியும் சொல்லியும் கேட்கல” இதுதான் இப்ப டிரெண்டா இருக்கு. இனி வரப்போற தவெக வெற்றியை யாரும் தடுக்க முடியாது” என உணர்ச்சி வசப்பட, விஜய் பெருமிதத்தோடு கை தட்டி ரசித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago