https://republictn.com/

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து கட்சியில் பிரச்சனை பூதாகரமாகி முன்னாள் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியினரும், சி.வி.சண்முகம்,வேலுமணி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் வேலுமணி சி.வி சண்முகம் அணியை சேர்ந்த 25எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகம் மற்றும் வேலுமணியை தரப்பைச் சார்ந்த அனைத்து கட்சி உள்ள நிர்வாகப் பதவிகளையும் காலி செய்து உத்தரவிட்டார்.

இதில் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பரஞ்சோதி, மாவட்டச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.குமார், மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திருச்சியில் நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே அதிமுகவில் இரண்டு அணியாக பிளவு ஏற்பட்டு இருந்த நிலையில் இன்று மூத்த அதிமுக நிர்வாகி செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே திருச்சியில் அதிமுகவின் இருந்த முக்கிய நிர்வாகிகளான அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளரும், மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே என் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட கருமண்டபம் பத்மநாதன், உறையூர் பகுதி செயலாளர் பூபதி (எ) பூபேந்திரன், ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர்.பாண்டி, இளைஞர் பாசறை மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை வினோத், அதிமுக இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தென்னூர் ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ் ஆகியோரும் இணைந்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை செயலாளராக இருந்த சேட்டு, மதிமுக கட்சி சேர்ந்த நிர்வாகி ராஜா மற்றும் நிர்வாகி ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து, தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago