https://republictn.com/

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், “மக்கள் மேடை” என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இது ரஜினிக்கு பிடிக்காததால் அவர் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார் என பிரபல யூடியூபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்று பேட்டியளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், ”முதல் தடவை ஊட்டிக்கு சென்று இருக்கிறார் ரஜினி. வழக்கமாக ‘எனக்கு வேலை, சூட்டிங் என ஓய்வு எடுக்க செல்கிறேன் எனச் சொல்லி இமயமலை போய் விடுவார் ரஜினி. இந்த முறை ஊட்டியில் போய் இருந்து விட்டார். அங்கே ஒரு நான்கு நாள் இருந்தார். அதுக்கு அப்புறம் அங்கே ரசிகர்கள் தொல்லை கொடுப்பதாகச் சொல்லி இப்போது மைசூரில் இருக்கிறார். இது யாருக்கும் தெரியாது. அவர் ஏன் அங்கு சென்றார்? அதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது என்றால் ரஜினிகாந்த் இனி எந்த சூழலிலும் அரசியலுக்கு வரமாட்டேன். என்னுடைய உடல் நலம் சரியில்லை என்று சொல்லி, நான் இனிமேல் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ஒதுங்கி விட்டார். ஆனால் லதா ரஜினி ஒரு இயக்கம் தொடங்குகிறேன் என்று சொல்லி சொல்லி அறிவித்து விட்டார்.

இது ரஜினிக்கு பிடிக்கவில்லை. தன்னுடைய மனைவி இப்படி தன்னுடைய எண்ணத்துக்கு மாறாக நடக்கிறாரே என்கிற கோபத்தில் கூட இருக்கலாம். இதனை வெறுத்த ரஜினி கொஞ்ச நாள் விலகி இருக்கலாம் என சென்று விட்டார். 1996ல் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு வந்தது. அதை கலைஞருக்கு விட்டுக் கொடுத்து விட்டார். இப்போதும் சமீபத்தில் ஒரு சூழ்நிலை இருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டு விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். கேப்டன் விஜயகாந்த் மரணத்துக்கு அப்புறம் அவரது மனைவி பிரேமலதா எம்எல்ஏ ஆகிவிட்டார். மச்சான் சுதீஷ் எம்பி ஆகி விட்டார்.

ஆனால், அது போல நாம் ஆக முடியவில்லையே என்கிற பேராசை லதா ரஜினிக்கு ஏற்பட்டு விட்டது. இந்த புதிய இயக்கம் தொடங்கி கட்சி ஆரம்பிக்கலாம் என லதா திட்டமிட்டுள்ளார். அது ரஜினிக்கு பிடிக்கவில்லை. ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். லதா ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் மதிப்பார்கள். ஆனால் அவரை நம்பி அரசியல் செய்ய பின்னால் போக மாட்டார்கள். விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய மனைவியை தன்னுடைய வாரிசு எனச் சொல்லி அரசியலுக்கு கூட்டி வந்துவிட்டார். இதுவரைக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் லதாவை ஈடுபடுத்தி இருக்காரா? ஹவுஸ் வைஃப் ஆக தான் தன்னுடைய மனைவி இருக்க வேண்டும் என்று விரும்பினார்” எனக் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago