Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

P.shanmugam

திமுக தலைமையிலான கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை; மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவுடன் சேர்ந்து போராட தயாராக உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 3 மாதம்கூட தாங்காது என சொல்லக்கூடாது, அது தவறு; மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி என யார் கூறினாலும் தவறு.

தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் ஆளும் கட்சியில் பலனை எதிர்பார்த்து சேருவதும், வாக்களித்த மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெற்றி பெற்றவர்கள் போய் ஆளும் தரப்பிடம் சேருவதும் ஒன்றல்ல. அடுத்து ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அவர்கள் வீட்டு பணத்தையா செலவழிக்கப்போகிறார்கள்; இரண்டும் ஒன்றல்ல, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. அலை என்பதற்கும் தனிப்பெரும் கட்சி என்பதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. அலை இருந்திருந்தால் அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை 3 மாதம் கூட தாங்காது என கூறுவது தவறானது. அது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி. அவ்வாறு சொல்லக்கூடாது . தமிழகத்தில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க   ”தாத்தா SAC கொடுத்த சீக்ரெட் அட்வைஸ் - போட்டுடைத்த ஜேசன்!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago