Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

sekar babu

‘கொளத்தூர் அதிர்ச்சி’யிலிருந்து உடன்பிறப்புகள் இன்னும் மீளவில்லை. தி.மு.க தலைவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை சித்தரஞ்சன் சாலைக்கு பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கு முழுக் காரணம் யார் என்ற தேடலில், ‘குற்றவாளி’ கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.

சித்தரஞ்சன் சாலையில் விழுந்த சொம்பு அடி
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி குறித்து விசாரணை நடத்த சேகர்பாபுவை அழைத்த தி.மு.க குடும்பம், அவரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தத் தவறியது, தேர்தல் பணிகளில் தொய்வு எனப் புகார்கள் அடுக்கப்பட, ஒருகட்டத்தில் சேகர்பாபு தேம்பித் தேம்பி அழுது மன்னிப்பு கேட்டாராம்.

ஆனாலும், “எல்லாம் செய்துவிட்டு இப்போது அழுவது வெறும் நாடகம்” என்று ஆத்திரமடைந்த குடும்பத்தார் அங்கிருந்த சொம்பை எடுத்து அவர் மீது வீசி அடித்ததாக ஒரு பரபரக்கப்படுகிறது. இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், “நான் எம்.எல்.ஏ பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்” என்று சேகர்பாபு சாஷ்டாங்கமாக விழுந்து கதறியதுதான் தற்போது அறிவாலய வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

இதையும் படியுங்க  "கோட்டையை உலுக்கிய கருப்புப் புயல்! விஜய் அரசுக்கு எதிராக 'பிளாக் டீ-சர்ட்டில்' உதயநிதி ஸ்டாலின் மாஸ் என்ட்ரி!"

உதயச்சந்திரன் மீது- சேகர்பாபுவின் ஆவேசம்
தன்னை இப்படி ஒரு நிலைக்குத் தள்ளியது அதிகார வர்க்கத்தின் பின்னணிதான், குறிப்பாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் கொடுத்த தவறான ரிப்போர்ட்கள்தான் சேகர்பாபுவின் ஆத்திரத்திற்குக் காரணம் என்கிறார்கள். சித்தரஞ்சன் சாலையில் அவமானப்பட்டு வெளியே வந்த சேகர்பாபு, நேராகக் கோட்டைக்குச் சென்று உதயச்சந்திரன் அறைக்குள் நுழைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சேகர்பாபு, உதயச்சந்திரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. “உன்னால்தான் எனக்கு இந்த நிலைமை” என்று அவர் கர்ச்சித்த சம்பவம், திமுகவினரிடையே பேரதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக்கை அடிக்கு பதிலடி..!
தன்னை அடித்த சேகர்பாபுவைச் சும்மா விடுவதாக இல்லை என கங்கணம் கட்டி இருக்கிறார் உதயச்சந்திரன். இதற்காக சேகர்பாபுவின் கடந்த காலச் செயல்பாடுகள், தேர்தல் நேரத்தில் நடந்த குளறுபடிகள், நிர்வாக ரீதியான தவறுகளைத் திரட்டி ஒரு மெகா ரிப்போர்ட்டை தலைமைக்கு அனுப்ப அவர் தயாராகி வருகிறார்.

அடுத்த சில நாட்களில் சேகர்பாபுவை கட்சியில் இருந்தே நீக்க வைப்பதற்கான காய்களை உதயச்சந்திரன் தீவிரமாக நகர்த்தி வருகிறாராம். உள்ளடி வேலைகள் ஒருபுறம், நேருக்கு நேர் மோதல்கள் மறுபுறம் என தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போர், அறிவாலய வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையும் படியுங்க  "சாமி வரம் கொடுத்தும் பூசாரி தடுத்த கதை!" கார் இருந்தும் பைக்கில் வந்த ஆளுங்கட்சி MLA - மனம் நொந்து சொன்ன காரணம்
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago