Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுகவில் 110 புதிய மாவட்டங்களை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து கட்சிக்குள் மிகப்பெரிய பரபரப்பே தொற்றிக்கொண்டுள்ளது. அதிகமான சட்டமன்ற தொகுதிகளை தங்களோட மாவட்டங்களில் வைத்திருந்த பல சீனியர்களின் அந்த கெத்து இப்போது மொத்தமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

94 மாவட்டங்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் 15 மாவட்டங்களுக்கு மூன்று சட்டமன்ற தொகுதிகள் என தமிழ்நாட்டு மேப்பையே பிரித்து மேய்ந்திருக்கிறது திமுக தலைமை. இந்த அதிரடியால் முக்கியத்துவத்தை இழந்த அந்த சீனியர்களான எ.வ.வேலு, எம்.ஆர்.லே பன்னீர் செல்வம், கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டவர்கள் தாங்கள் இழந்த அந்த இடங்களில் ”இது என் பையன், இது என் மருமகன், இது என் மாப்பிள்ளை, இது என் ஒன்னு விட்ட அண்ணன், பையன் இது என் கூட பிறந்த தங்கச்சி பையன்” என அந்த இடத்தை தங்களோட வாரிசுகள், சொந்தக்காரர்கள், விசுவாசமான ஆட்கள் மூலமாக திரும்ப பிடிப்பதில் ரொம்பவே தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனக்கு பதிலாக தனது மகன் கதிரவனையோ, அல்லது தனது தீவிர ஆதரவாளர் ஒருத்தரையோ பொறுப்புக்கு கொண்டு வருவதற்கு ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு இருக்கிறாராம். இதே மாதிரிதான் தமிழ்நாடு முழுவதும் பதவி இழக்கிற, அல்லது முக்கியத்துவத்தை இழக்கிற அந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்களுடைய வாரிசுகளையோ அல்லது சொந்தக்காரர்களையோ உள்ளே கொண்டு வருவதற்கு ராப்பகலாக பாடுபட்டு அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  "சாமி வரம் கொடுத்தும் பூசாரி தடுத்த கதை!" கார் இருந்தும் பைக்கில் வந்த ஆளுங்கட்சி MLA - மனம் நொந்து சொன்ன காரணம்

மாவட்ட செயலாளர்கள் கதையே இப்படி அப்படி என்றால் ஒன்றிய செயலாளர்களின் நிலைமை இன்னும் இதைவிட மோசம். 25 வருஷம், 30 வருஷம் ஏன் 40 வருஷம் கூடதொடர்ந்து ஒன்றிய செயலாளர் பதவியிலேயே உட்கார்ந்திருக்கிற இந்த வயதான இளைஞர்கள் திமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள். செயற்குழு விதிகளின் படி இவர்களின் பதவிகள் இப்போது தானாகவே காலியாகிற நிலையில் அந்த இடத்துக்கு தங்களுடைய மகன்களையோ அல்லது மருமகன்களையோ உட்கார வைப்பதற்கு அவர்களும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

இப்படி திமுக தலைவர் என்னதான் கட்சியை காப்பாற்ற, கட்சியை சீர்படுத்த, கட்சியை வலுபடுத்த புதுப்புது சட்டத்திட்டங்களை கொண்டு வந்தாலும் அதில் எங்கே சந்து, பொந்துகளில் ஓட்டை இருக்கிறது என அதை தேடித் தேடி புகுந்து தங்களுடைய வாரிசு அரசியலை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் அந்த பழுத்த பலன்கள் பாவம் இந்த மனுஷன் கட்சியை வலுப்படுத்துவதுக்காக இவ்வளவு ஸ்டெப் எடுத்தோம். இவங்க இப்படி பண்றாங்களே.. என ஃபீல் செய்து கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இதையும் படியுங்க  விஜய்- ஆட்சியை குறை சொல்ல அருகதை இருக்கா..? உள்நாக்கு வரை உலர்ந்துபோன திமுக..! லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தவெக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago