Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு (1 முதல் 3ஆம் வகுப்பு வரை) ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நிலவும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்க  "கோடிகளில் லஞ்சக் கூத்து… இருளில் தவிக்கும் நுகர்வோர்… மின்வாரியத்தின் மெத்தனத்தால் மக்கள் திண்டாட்டம்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago