Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னையில் குதிரைகளுக்கு “கிளாண்டர்ஸ்” நோய் பரவும் அபாயம் இருப்பதாக கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், சில குதிரைகளில் கிளாண்டர்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது என்பதால், இது கவலைக்கிடமான சூழ்நிலையாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குதிரைகளுடன் தொடர்பில் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குதிரைகள் மூலம் கிளாண்டர்ஸ் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் குதிரை பராமரிப்பில் ஈடுபடுபவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago