Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கில் மின்சார கோளாறு காரணமாக திரைப்படம் சரியான நேரத்தில் திரையிடப்படாததால் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் இரவு காட்சியை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்திருந்தனர்.

ஆனால் மின்சார கோளாறு காரணமாக திரைப்படத்தை திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் திரையரங்கில் குளிர்சாதன வசதி செயல்படாததால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago