Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Pondycherry

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு… உறக்கம் களையாத செப்டம்பர் 25 ந்தேதி காலை நேரம். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த 22 வயது “ஜெயஸ்ரீ’ , வழக்கம் போல் அன்று வேலைக்கு கிளம்பினார். ஆனால் வீடு திரும்பவில்லை. சில நாட்களில் கிடைத்ததோ, வெட்டிக் கொலை செய்யப்பட்ட அவரது பூத உடல்

கொன்றது யார்? போலீசாரின் முதல் சந்தேக வளையத்தில் சிக்கியது அதே பகுதியை சேர்ந்த “ரவுடி கலைக்குமார்.” கொள்ளை,, கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா என பல வழக்குகளில் சிறை சென்று வந்தவன்.

காதல் முதல் கண்காணிப்பு வரை…
சில ஆண்டுகளுக்கு முன் ஜெயஸ்ரீ – கலைக்குமார் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால், அவனது ரவுடி பின்னணி தெரிந்ததும் ஜெயஸ்ரீ ஒதுங்கியிருக்கிறார். பேசுவதை நிறுத்தியிருக்கிறார்.

20-நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த கலைக்குமார், மீண்டும் அவரை நெருங்க முயன்றிருக்கிறான். ஜெயஸ்ரீ மறுத்திருக்கிறார். அதோடு வேறொரு நபருடன் பழகி வருவதை அறிந்ததும், கலைக்குமாரின் ஆத்திரம் எல்லை மீறியிருக்கிறது.

இதையும் படியுங்க  "விநாயகர் ஊர்வலத்தில் பயங்கரம்..! ரத்த வெள்ளத்தில் சரிந்த அரசு ஊழியர்..: சென்னையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!"

நண்பர்கள் உதவியுடன் ஜெயஸ்ரீயை கண்காணித்து, செப்டம்பர் 25-ந்தேதி வழக்கமாக சந்திக்கம் இடத்திற்கு அழைத்து சென்று முட்புதரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்திருக்கிறான் என்கிறது போலீஸ் விசாரணை.

சிக்கிய செல்போன் தகவல் கொடுத்த நண்பன்
ஜெயஸ்ரீ பெற்றோர் கொடுத்த புகாரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், எஸ்.ஐ. திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். முதலில் நண்பன் லோகேஷ் கைது. அடுத்து ரவுடி கலைக்குமார், கார்த்திக் இருவரும் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே பதுங்கியிருப்பதாக தகவலறிந்து. தனிப்படை விரைந்தது.

அங்கு சிக்கிய கார்த்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஜெயஸ்ரீயிடம் பேசுவதற்காக கலைக்குமாருக்கு செல்போன் கொடுத்ததும், அவரை சந்திக்கச் செல்ல தனது பைக்கை கொடுத்ததும் கார்த்திக்தான்!

தண்டவாளத்தில் பிணமாக ரவுடி
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செப்டம்பர் -30 இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் ஒரு உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல். கிடைத்து விரைந்து சென்று பார்த்ததில் … அது ரவுடி கலைக்குமார் உடல்

இதையும் படியுங்க  ஆளுநர் மாளிகை கொடுத்த நெருக்கடி.. அம்பலப்படுத்திய தவெக!

களத்தில் இறங்கிய போலீசார் அவனது உடலை கைப்பற்றி , அவன் ரயிலில் அடிபட்டு இறந்தானா? தற்கொலை செய்து கொண்டானா? அல்லது கொலை வழக்கில் இருந்து தப்பிக்க யாராவது தீர்த்துக் கட்டினார்களா? என மூன்று கோணங்களில் தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜெயஸ்ரீ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியே மர்மமான முறையில் இறந்து கிடப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதல், துரோக சந்தேகம், கொலை, தலைமறைவு, மர்ம மரணம்… இந்த வழக்கின் அடுத்த திருப்பம் என்ன? அடுத்தடுத்து போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவரும்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago