https://republictn.com/

பதவியேற்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கிய ஆதவ் அர்ஜுனா, “தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்படுவதில் எங்கள் அரசுக்குத் துளியும் உடன்பாடில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘ ‘தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-வதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3வது பாடலாக ஒலிக்கப்பட்டது; இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது” என அவர் அளித்துள்ளார்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago