https://republictn.com/

பெற்ற தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 16 வயது புதுமணப் பெண் சஜிதா பர்வீன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காதலுக்குத் துணையாக இருந்த தாயும், அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரின் அராரியாவி மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையிலான முறையற்ற உறவைத் தடுத்ததாகக் கூறப்படும் 16 வயது புதுமணப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, இறந்தவரின் தந்தை முகமது முத்தாசிர், தனது மகள் சஜிதா பர்வீன் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துவிட்டதாக ஆர்.எஸ். காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். இதனையடுத்த காவல் நிலைய அதிகாரி அங்குர் குமார் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினார். வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தடயவியல் ஆய்வகக் குழுவும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திலிருந்து பல முக்கிய ஆதாரங்க்களைச் சேகரித்தனர்.

இறந்தவரின் தந்தை முகமது முத்தாசிர், தனது மனைவி ஷைஸ்தா பர்வீனுக்கும், மருமகன் அப்பு நசாருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக முறையற்ற உறவு இருந்து வந்ததாகக் காவல்துறையிடம் தெரிவித்தார். இந்த உறவை அக்கம்பக்கத்தினரிடம் இருந்து மறைப்பதற்காக, ஷைஸ்தா தனது 16 வயது மகள் சஜிதாவை அப்பு நசாருக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

குடும்பத்தினர் கூறியபடி, அப்பு நஸ்ர் தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது மூத்தவர் என்பதால் சஜிதா திருமணம் செய்ய விரும்பவில்லை. இருந்தபோதிலும், அவர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு, மருமகன் கோதி சௌக்கில் தன் மனைவியுடன் குடியேறினார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் தன் மாமியார் வீட்டிற்குச் சென்று வரவும், தன் மாமியாருடன் நேரம் செலவிடவும் தொடங்கினார். சஜிதா தனது தாயையும் கணவரையும் அடிக்கடி தவறான நிலையில் பார்த்ததாக தந்தை குற்றம் சாட்டுகிறார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள், சண்டைகள் வந்துள்ளது. மகள் அவர்களின் உறவை தொடர்ந்து எதிர்த்ததால், தாயும் மருமகனும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே பல நாட்கள் ஒன்றாக ஜாலியாக இருந்துள்ளனர் என்றும், வீட்டிலும் தங்கள் அறைக்குள் முடங்கிக் கிடப்பார்கள் என்றும் அவர் கூறினார். சஜிதா இந்த உறவை வெளிப்படையாக எதிர்த்துள்ளார். இது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியது.

சம்பவம் நடந்த இரவில் தான் வீட்டில் இல்லை என்று இறந்த பெண்ணின் தந்தை கூறினார். திரும்பி வந்ததும், சஜிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மனைவியும் மருமகனும் அவரிடம் தெரிவித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பியபோது, ​​அவர்களின் மகள் சுயநினைவின்றி இருந்துள்ளார். நள்ளிரவில், தம்பதியினர் திடீரென சஜிதாவின் மரணம் அடைந்து விட்டதாகக்கூறி, உடலை உடனடியாக அடக்கம் செய்யும்படி அவர்களை வற்புறுத்தத் தொடங்கினர். இது தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காலையில், அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தாய் ஷைஸ்தா பர்வீன் மருமகன் அப்பு நஸ்ர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். சதர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஷில் குமார், முதற்கட்ட விசாரணையில் இந்த வழக்கு மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையிலான முறையற்ற உறவுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது என்றும், இதன் காரணமாகவே அந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago