விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி இருந்ததால் கழிப்பறை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ஆனந்த் – கழிப்பறையின் நிலையை வீடியோ கால் மூலம் அமைச்சர் ராஜ்மோகனுக்கு புகார் தெரிவித்தார்

விழுப்புரம் அருகே உள்ள வ.பகண்டை கிராம மேல்நிலைப்பள்ளி கடந்த திமுக ஆட்சியில் ரூபாய் 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது மாணவர்கள் தாங்கள் பள்ளிக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சரை தனது செல்போனில் அழைத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு போக்குவரத்து வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

மாணவர்களின் புகாரை அடுத்து பின்னர் பள்ளி கழிவறையை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது கழிவறை பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்ததை கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படியுங்க  "ஸ்கூல் பேக் பாரம் இனி காலி!" – தமிழ்நாட்டில் மாறுகிறது புதிய கல்விமுறை.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

துர்நாற்றம் வீசியது, பின்னர் உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் தனது செல்போன் மூலம் வீடியோ காலில் அழைத்து நிலவரத்தை நேரில் காண்பித்தார். பின்னர் உடனடியாக பள்ளி கழிவறையை சரி செய்து தரும்படி கூறினார்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *