Tvk MLA

கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க- எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ஆபசமாக பெண் கலெக்டருக்கு வாட்ஸ் அப் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ”இது தி.மு.க.,வினரால் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்” என எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக் குறிச்சி தொகுதி தவெக – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு மதுபோதையில் வாட்ஸாப்பில் தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பியதாக, தற்போது சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே தவறான கண்ணோட்டத்தில் எம்.எல்.ஏ., அனுப்பிய மெசேஜ் குறித்து கட்சியின் சீனியர் அமைச்சர் கவனத்திற்கு கலெக்டர் கொண்டு சென்ற நிலையில், எம்.எல்.ஏ.,வை நேரடியாக வரவழைத்து கலெக்டரிடம் வருத்தம் தெரிவிக்க வைத்து சமரசம் செய்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில், கலெக்டரும், எம்.எல்.ஏ.,வும் ஒன்றாக பங்கேற்பதை தவிர்த்து வந்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  விஜய் மீது பாய்கிறது சிபிஐ வழக்கு..? இடியை இறக்கிய அதிமுக எம்.பி..!

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட த.வெ.க – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது ”இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி வீட்டிற்கு சென்று பிரச்னை செய்ததாக கூறுவதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அவ்வாறு தான் செய்ய முடியுமா? கலெக்டருக்கு நான் எதற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்? நான் தவறான கண்ணோட்டத்தில் எந்த மெசேஜுன் அனுப்பவில்லை. ஒரு மாவட்டத்தின் உயர் பதவியில் இருப்பவரிடம், எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க, தி.மு.க- ஐ.டி விங் பரப்பும் பொய்யான தகவல். திமுக மற்றவர்கள் மீது பழிபோட பெண் விவகாரத்தையும். போதை குற்றச்சாட்டையும் கையில் எடுக்கும். அப்படி ஒன்று தான் என் மீதான குற்றச்சாட்டும்.

கடந்த தி.மு.க ஆட்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த வேலு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் எவ்வித அடிப்படை வசதியுமின்றி கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தை கொண்டு வந்தனர். பஸ் நிலையத்தை சுற்றிலும் பிளாட் போட்டு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். இதனால், பஸ் நிலையத்தை மாற்றுவதற்கு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். எனவே, தி.மு.க – ஐ.டி., விங் வழியாக என் மீது வீண்பழியை சுமத்தி, த.வெ.க., ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி... மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

இ ந்நிலையில் தி.மு.க., துணைப்பொதுச்செயலர் கனிமொழி பெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு, த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், அதைத் தொடர்ந்து கலெக்டருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

த.வெ.க., – எம்.எல்.ஏ., ஒருவரால், கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க தனி பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் வாயிலாக மட்டும், தலைமை செயலர் அந்த கலெக்டருக்கு என்ன பாதுகாப்பை கொடுத்து விடப் போகிறார்; முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *