Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

விஜய் பிறந்தநாளுக்கு எந்தவொரு பதிவையும் போட்டு விடாதேம்மா என்றும் புதுசா போட்டோக்களை இறக்கிடாதீங்க என ஏகப்பட்ட மீம்களை விஜய் ரசிகர்களே பதிவிட்டு வந்த நிலையில், பிழைத்துப் போகட்டும் என த்ரிஷா விட்ட ஒரு நாள் கேப்பில் ‘த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் பிரேக்கப்” என்றும் ”விஜய்யை அன்ஃபாலோ செய்து விட்டார் த்ரிஷா” என்றும் நேஷ்னல் மீடியாக்களே கதறும் அளவுக்கு செய்திகள் பரவின. இதுக்கு மேல சும்மா இருந்தால் சரியா இருக்காது என நினைத்த நடிகை த்ரிஷா நேற்று தனது இன்ஸ்டாகிராமில் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய அழகான போட்டோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களின் இதயங்களில் இடியை இறக்கி விட்டார். அதுவும் 00:00 என பதிவிட்டு உங்க சி.எம் நட்ட நடு இரவில் என்னுடன் தான் இருக்கிறார் என டைம்ஸ்லாப் போட்டதில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்..?

விஜய்யின் சட்டசபை பேச்சுக்கும், ஆக்‌ஷனுக்கும் ஃபயர் விட்ட ரசிகர்களே, த்ரிஷா வெளியிட்ட போட்டோவுக்குப் பின் அப்செட் ஆகியுள்ளனர் என்பதையும் மறுக்கவே முடியாது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜய் நடிகை த்ரிஷாவுடன் எப்படி பிறந்தநாள் கொண்டாடலாம் என்றும் சங்கீதா, ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷாவை எல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லையே என விஜய் ரசிகர்களே பலர் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க   "60 நாட்களில் 4 லாக்-அப் மரணங்களா? தவெக அரசை உலுக்கிய திமுகவின் திடீர் சென்னை சாலை மறியல்!"

எல்லாரும் த்ரிஷா தான் side chick-ன்னு நெனச்சிக்கிட்டு இருக்கானுங்க, ஆனா அவனுங்க அண்ணன் விஜய்தான் த்ரிஷாவுக்கு side chick- திமுக அனுதாபிகள் ஒருபக்கம் கதறடித்து வருகின்றனர். விஜய் – சங்கீதா இருவரும் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துறாங்க என்கிற அளவுக்கு கதை கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை தான் அந்தோ பரிதாபம் என்கிற ரேஞ்சுக்கு மாறிவிட்டது.

ஆனால், உறவை த்ரிஷா முறித்துக் கொள்ள நினைத்தாலும் விஜயால் விட்டுவிட்டு போகமாட்டார் என அடித்துச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதற்கான ஃப்ளாஷ் பேக்கை விவரித்த அவர்கள், ”த்ரிஷா ஒரு கட்டுக்கடங்காத குதிரை. ஒரே நேரத்தில் பலரையும் தன் வசப்படுத்தி கடிவாளம் போட்டு தன் வசத்துக்குள் கொண்டு வந்து விடுவார். அப்படித்தான் ஒரே நேரத்தில், விஜய், உதயநிதி இருவருடனும் நட்பில் இருந்தார். தன்னுடன் உறவில் இருந்தபோது உதயநிதியுடன் த்ரிஷா நெருக்கம் காட்டுவது விஜய்க்கு அறவே பிடிக்கவில்லை.

வெறுப்பான விஜய், ”உதயநிதி கூப்பிட்டால் நீ ஏன் போகிறாய்..? என்னிடம் இல்லாத பணமா? புகழா? என கொதித்துக் கேட்டுள்ளார் விஜய். அதற்கு ” உன்னிடம், பணம் இருக்கிறது… புகழ் இருக்கிறது.. ஆனால், பதவி இல்லை… அதிகாரம் இல்லை. அதெல்லாம் உதயிடம் இருக்கிறதே..” கூலாக த்ரிஷா த்ரிஷா சொல்ல, அந்த நொடியே, ”நான் சிம் ஆகிக் காட்டுகிறேன்” என அதிரடியாக சவால் விட்டுள்ளார் விஜய். அங்கிருந்து வெடித்த மோதல் தான் உதய்க்கும், விஜய்க்கும் இப்போது வரை தொடர்கிறது.

இதையும் படியுங்க  தயாராகும் தள்ளுபடி அறிவிப்பு… விவசாயிகளின் வாயை அடைக்க முதல்வர் விஜய் மாஸ்டர் ப்ளான்..!

ஆனாலும் அந்த நாட்களில் விஜயை விட, உதயின் அனுசரணையில் இருப்பதையே அதிகம் விரும்பினார் த்ரிஷா. விஜய் முதல்வரானும் இன்னும் உதயுடன் த்ரிஷா நட்பில்தான் இருக்கிறார். இடையில் விஜய் – சங்கீதா மீண்டும் இணைவதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மை. ஆனால், அதை த்ரிஷா விரும்பவில்லை. தன் பிடியைவிட்டு விஜய் விலகி விடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டி செயல்படுகிறார். இதற்கு பின்னணியில் த்ரிஷாவுக்கு தூண்டுகோலாக இருக்கிறார் உதய்.

மனைவி சங்கீதாவுடன் மீண்டும் விஜய் இணைய முடிவெடுத்தாலும், த்ரிஷா- உதய் நட்பு மனதில் ஈட்டியாய் இறங்க, அந்த ஈகோ தான் த்ரிஷாவை விட்டு பிரியவிடாமல் விஜயை பாடாய்ப்படுத்துகிறது. இந்த முக்கோண உறவை த்ரிஷாவும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. த்ரிஷாவை பகடைக்காயாக வைத்தே விஜய்க்கு எதிராக அரசியலில் அஸ்திரம் பாய்ச்சுகிறார் உதய். அப்படியொரு அஸ்திரம்தான் விஜய் பிறந்த நாளுக்கு மறு நாள் விஜயுடன் இருக்கும் படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார். சட்டசபையில் விஜய் பேசியது வைரலாவதை தடுக்க, த்ரிஷாவை தூண்டிவிட்டு அந்த புகைப்படத்தை பதிவேற்ற வைத்ததன் பின்னணியில் இருந்த சூத்திரதாரியே உதநிதி தான் என்கிறார்கள்.

இதையும் படியுங்க  "பேரு ஜோசப் விஜய் தான்.. ஆனா..!" – மதுரையில் அரசியல் விமர்சகர்களை அதிர வைத்த ஆதீனத்தின் 'மாஸ்' பேட்டி!

இதெல்லாம் விஜய்க்கு தெரியாமல் இருக்குமா? இருந்தும் ஏன் த்ரிஷா நட்பை துண்டிக்காமல் இருக்கிறார் விஜய்..? நட்பு, உறவையும் தாண்டி யாரும் கொடுக்க முடியாத ஒன்று த்ரிஷாவிடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் விஜயால் அவரை விலகவே முடியாது என அடித்துச் சொல்கிறார்கள்” அவரது நட்பு வட்டாரத்தினர். அப்படி என்னவாகத்தான் இருக்கும் அந்த ஒன்று..?

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago