Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த திமுக ஆட்சியில் கே.என். நேரு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களில் போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் குப்பை அள்ளும் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டுவதற்காக, லாரியின் அடிப் பகுதியில் முழுமையாக மண்ணை நிரப்பி, அதற்கு மேல் மட்டும் லேசாக குப்பைகளைப் போட்டு எடை காட்டி ஏமாற்றிய மெகா மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய தவெக அரசு தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் குப்பை அள்ளும் டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது தவிர, கோவை செம்மொழிப் பூங்கா டெண்டர் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்ட டெண்டர்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரவிருக்கும் இந்தச் சூழலில், திமுகவின் முக்கிய தேர்தல் களப்பணியாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பாயலாம் என்று கோட்டை வட்டார அதிகாரிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  டாஸ்மாக்கை கைவிடும் தவெக அரசு..! விஜயின் அதிரடி முடிவு..! மது ஒழிப்பு மாஸ் வெற்றியா..?
One thought on “திமுக-வில் அடுத்த ‘விக்கெட்’ கே.என்.நேரு..? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கு கட்டையைப்போடும் விஜய்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago