Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் காணொளியை இன்ஸ்டாகிராம் முடக்கியது. அந்தக் காணொளியில், விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்ட வீடியோவை பகிர்ந்து இருன்ந்தார். இன்ஸ்டாகிராம் பின்னர் தவறை சரிசெய்து வீடியோவை மீண்டும் இயக்கினாலும், பல மணிநேரம் நீடித்த இந்த முடக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சில சமூக ஊடகர்கள் இந்த முடக்கத்திற்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது இன்ஸ்ட்ராகிராம் நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தவறு என்றும் விளக்கம் அளித்தது.

சில சமூக ஊடகர்கள், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தியின் சில பதிவுகள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் முடக்கப்பட்டதாக தவறாகக் கூறியதாக அமைச்சகம் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கும் MeitY-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது. தளத்தின் உள் அமைப்புகளில் ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக, இந்தப் பதிவுகள் தவறுதலாக முடக்கப்பட்டதாகக் கூறப்பகிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago