Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Chigger Mites

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர், கண்ணுக்கே தெரியாத மிகச்சிறிய பூச்சி கடித்ததால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு, மலேரியா காய்ச்சல் என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள், இந்த ‘உண்ணிக் காய்ச்சல்’ வெறும் 5 நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடியது என்று தெரிவிக்கின்றனர்.

ஸ்கரப் டைபஸ் (Scrub Typhus) என்றால் என்ன?
இந்த நோய்க்கான முதன்மை காரணி ‘நரி உண்ணிகள்’ எனப்படும் ஒருவகை பூச்சிகளாகும். இவை 0.2 மி.மீ முதல் 0.4 மி.மீ வரை மட்டுமே அளவு கொண்டவை என்பதால், சாதாரண மனிதக் கண்ணுக்குத் தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே இதைப் பார்க்க முடியும். புதர்கள், காடுகள், செடி-கொடிகள் மற்றும் வீட்டின் அருகிலுள்ள புல்வெளிகளில் இவை வாழ்கின்றன.

இந்தப் பூச்சிகள் கடிக்கும் போது வலி தெரியாது. ஆனால், அவற்றின் எச்சில் மூலம் ‘ஓரியன்டியா சுட்சுகமுஷி’ எனும் பாக்டீரியா மனித ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

இதையும் படியுங்க  ‘தர்பூசணி’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தின் 4 பேர் மரணம்..! அம்பலமான பகீர் பின்னணி..!

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
பூச்சி கடித்த இடத்தில் சிகரெட் சூடு பட்டது போலவோ அல்லது சிறிய சரங்கு போலவோ கருப்பு நிற தழும்பு உண்டாகும். இதற்கு வலியோ, அரிப்போ இருக்காது. தாங்க முடியாத தலைவலி, தசை வலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் (Rashes) தோன்றும். கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் வீக்கம் ஏற்படலாம்.

அலட்சியம் காட்டினால் என்னவாகும்?
சாதாரண காய்ச்சல் என நினைத்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு அலட்சியமாக இருந்தால், 5 முதல் 6 நாட்களுக்குள் இந்த பாக்டீரியா ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி மூச்சுத்திணறல், சிறுநீரகம், மற்றும் கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டு சென்று உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

ஆரம்பக்கட்ட சிகிச்சை
தொடக்கத்திலேயே கண்டறிந்தால் ‘டாக்ஸிசைக்ளின்’ போன்ற சாதாரண ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மூலமே இதைக் குணப்படுத்திவிடலாம். காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமாகவே மருந்தகங்களில் மாத்திரை வாங்காமல், உடனே ‘Scrub Typhus ELISA’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

புல்வெளிகள் மற்றும் புதர்கள் நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது உடலை முழுமையாக மூடும் ஆடைகள் மற்றும் ஷூக்களை அணிய வேண்டும். வீடு, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் உள்ள புதர்களையும் தேவையற்ற செடிகளையும் உடனுக்குடன் வெட்டிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்க  "இறுதிச்சடங்கில் பார்த்தபோது அதிர்ச்சி.. மகளின் சடலத்தை மாற்றி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை! கதறிய பெற்றோர்!"

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் புதிய ஸ்கரப் டைபஸ் தொற்றுகள் பதிவாவதாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago