Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Bill Gates

செயற்கை நுண்ணறிவு (AI) எனும் அற்புதத் தொழில்நுட்பம், இன்று நம் கைப்பேசியிலும், வாழ்வியலிலும் இரண்டறக் கலந்துவிட்டது. ஆனால், அதே தொழில்நுட்பம் நாளை நம் இனத்தையே அழித்தொழிக்கும் ஒரு கொடிய பேராயுதமாக மாறக்கூடும் என்ற நிஜம் மனித குலத்தின் நெஞ்சில் ஈட்டியாக இறங்கத் தொடங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் முன்னணித் தொழில்நுட்பச் சிந்தனையாளருமான பில் கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை, வெறும் பேச்சல்ல… அது உலகிற்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு மரண ஓலை.

100 கோடி பிணங்கள் விழும்
என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், இதுவரை நாம் கற்பனை கூட செய்து பார்க்காத அளவுக்கு ஒரு திடுக்கிடும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் பில் கேட்ஸ். “செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் உடனடியாகக் கடுமையான சட்டங்களை இயற்றத் தவறினால், தவறான மனிதர்களின் கைகளில் சிக்கி 100 கோடிக்கும் அதிகமான மனித உயிர்கள் பறிபோகும்.

மனித வரலாற்றில் இதற்கு முன் தோன்றிய எந்தவொரு கண்டுபிடிப்பையும் விட AI மிகவும் பேராபத்து வாய்ந்தது. அணுஆயுதங்களை விடவும், கொடிய வைரஸ்களை விடவும் இது மிகக் கொடூரமான ஆயுதமாகத் தீய எண்ணம் கொண்டவர்களின் கைகளில் உருவெடுத்து வருகிறது. இது ஏதோ எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைப் பயம் என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஏனெனில், அதற்கான பேரழிவு அறிகுறிகள் இப்பொழுதே கண்கூடாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

இதையும் படியுங்க  ஏஐ- மூலம் புகுந்த ஏழரை சனி..! உலகுக்கே சாவுமணி.. மனிதர்கள் பேசுவதையே முடக்கும் பேராபத்து..!

OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி நிறுவனங்களின் AI ஏஜெண்டுகள், தங்களை உருவாக்கியவர்களின் கட்டுப்பாட்டையே மீறிச் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் பொது சுகாதாரச் சேவை இணையதளத்தை OpenAI-இன் AI ஏஜெண்டுகள் ஹேக் செய்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. அதைவிடக் கொடுமையாக, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குள்ளேயே புகுந்து, ரகசியத் தகவல்களைத் திருடிப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளன.

இன்னொரு பக்கம், ஏமன் தீவிரவாதிகள் Anthropic நிறுவனத்தின் கிளவுட் AI-ஐப் பயன்படுத்தி, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான வழிசெலுத்தல் (Navigation) மென்பொருளையே உருவாக்க முயன்றுள்ளனர். சிந்தித்துப் பாருங்கள்… ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உலகத்தையே சாம்பலாக்கும் சக்தி, தீவிரவாதிகளின் கைக்குச் சென்றால் மனிதகுலத்தின் கதி என்னவாகும்?

“AI நிறுவனங்கள் தங்களைத்தாங்களே சுய-பரிசோதனை செய்துகொள்ளும் என்று இனிமேல் நம்புவது தற்கொலைக்குச் சமம்” என்கிறார் பில் கேட்ஸ். தொழில் போட்டி , கோடிக்கணக்கான லாப வெறியில் இயங்கும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

இதையும் படியுங்க  "கோவையில் கார் திருவிழா: சொகுசு மற்றும் விண்டேஜ் கார்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு!"

இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் கண்முன்னே பூதாகரமாக வளர்ந்து நிற்கும் நிலையிலும், உலகின் தலைசிறந்த வல்லரசுகள் இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை. OpenAI-இன் சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic-இன் டாரியோ அமோடி போன்ற தொழில்நுட்பத் தலைவர்களே ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேசப் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரியபோதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இன்னமும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மனிதகுலத்தின் முடிவுரையா?
அறிவியலும் தொழில்நுட்பமும் மனிதனின் வாழ்வை எளிதாக்குவதற்காக உருவானவை. மனித குலத்தையே அழித்தொழிப்பதற்காக அல்ல. பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ள இந்த 100 கோடி உயிர்களின் கணக்கு, வெறும் எண்கள் அல்ல… உலகெங்கும் வாழும் அப்பாவி மக்களின் உதிரம்.

இப்போதாவது உலக நாடுகள் விழித்துக்கொண்டு, இந்த செயற்கை நுண்ணரக்கனுக்குக் கடிவாளம் போடக் கூடிய கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். தவறினால், நாம் ஆசையாக உருவாக்கிய தொழில்நுட்பமே, மனித நாகரிகத்தின் கடைசிப் பக்கத்தை எழுதி முடிப்பதைத் யாராலும் த தடுக்க முடியாது.

இதையும் படியுங்க  உலகை ஆளப்போகும் AI… ஆனா குடிக்கத் தண்ணிரும், மின்சாரமும் இருக்காது! ஐ.நா.வின் பகீர் எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago