Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

veeramani

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உதவியாக இருந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன், கணேசன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீரமணி மீதான பாலியல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா முறையீடு செய்துள்ளார்.

அதில், இந்த வழக்கில் சிறுமிகளின் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை உயர் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் புலன் விசாரணையை தொடரட்டும். முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  “ஜாமீன் இல்லை! சிறுமி கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது!”

இதேபோல, வழக்கறிஞ்ர நிவ்யா, சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago