https://republictn.com/

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற அனுமதி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்தியபிரதா சாகு உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வழிவகை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வண்டல் மண் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, 10 நாட்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago