புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டை சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலம் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் செப்டம்பர் மூன்றாம் தேதி தம்பியை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
வெங்கடாச்சலத்துக்கு இரண்டு மனைவிகள். அதாவது வெங்கடாச்சலத்தோட அண்ணன் மறைவுக்கு பிறகு அவரோட மனைவியையும் வெங்கடாச்சலமே திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளோட பிள்ளைகளுக்கும் நடுவில் ”எனக்கு இந்த இடம் வேணும். உனக்கு அந்த இடத்தை கொடுக்க முடியாது” என சொத்து பிரிப்பதில் பத்திரம், லேண்ட் மேப் எல்லாம் தூக்கி போட்டு பயங்கர பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
கல்யாணம் முடிஞ்சு போன மகள்களும், நாங்களும் வாரிசுதானப்பா எங்க பங்கையும் கொடுங்க என நடுவீட்டில் உட்கார்ந்து சண்டை போட்டு இருக்கிறார்கள். இந்த நிலைமையில்தான் வடகாட்டில் மூன்றாவது மகன் ராஜராஜன் குடியிருந்த வீட்டை கடந்த வருஷம் இரண்டாவது மகனும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான ராஜபாண்டியன் ”இந்த வீடு எனக்குதான் சொந்தம். எல்லாரும் வெளிய ஓடுங்க” என பூட்டை போட்டு அந்த குடும்பத்தை ரோட்டில் விரட்டி விட்டு இருக்கிறார். ராஜராஜன் சும்மா இருப்பாரா? நேரா கோர்ட்டுக்கு போனார்.

வழக்கு விசாரணைக்கு அப்புறமா தம்பி ராஜராஜனுக்கு தான் அந்த வீடு சொந்தம். அதனால வீட்டோட சாவியை கொடுத்து அந்த வீட்டை திறந்து வைங்கப்பா என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு போட்டுருச்சு. அந்த தைரியத்துல பூட்டி இருந்த வீட்டை திறந்து ராஜராஜன் குடும்பத்தின செப்டம்பர் மூன்றாம் தேதி அன்னைக்கு காலையில ”அப்பாடா கோர்ட் மூலமா ஒரு வழியா நமக்கு ஒரு நல்ல நியாயம் கிடைச்சிருச்சு” என அந்த வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணிவிட்டு இருந்துருக்காங்க.
இதை பார்த்ததும் அண்ணன் ராஜபாண்டியனுக்கு இரத்தம் கொதிச்சு போச்சு. என் பூட்டை உடைச்சிட்டு எப்படி நீ உள்ள வரலாம் என சண்டை இழுத்துருக்காரு. அப்போ அண்ணன் கையில கத்தியை பார்த்ததும் பயந்து போன தம்பி ராஜராஜன் உயிரை காப்பாத்திக்கிறதுக்காக ஓடி பக்கத்துல இருந்த ஒருத்தரோட குடிசை
வீட்டுக்குள்ள புகுந்துருக்கார். ஆனா வெறி பிடிச்ச ராஜபாண்டியன் விடாம துரத்திட்டு போய் கத்தியால குத்தியும் அங்கிருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து அவர் மண்டையில தூக்கி அடிச்சும் தம்பி ராஜராஜனை கொடூரமா கொன்னுட்டாரு.
அதுக்கப்புறம் தம்பியோட பைக்கை எடுத்துட்டு நேரா ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷன்ல போயி ”என் தம்பியை நான்தான்யா கொன்னேன்” என ரொம்ப கெத்தா சரண் அடைஞ்சிட்டாரு. இதுக்கப்புறமா கொலைக்கு பின்னணியில இருக்கிற ராஜபாண்டியனோட குடும்பத்தையே அரெஸ்ட் பண்ணனும் என சொல்லி ராஜராஜனோட சொந்தக்காரவங்க புதுக்கோட்டை டு பட்டுக்கோட்டை ரோட்ல வீட்டு பக்கத்துல மறியல் பண்ண ஆரம்பிச்சாங்க.
ராஜபாண்டியனால எங்களுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கு என கடந்த ஒரு வருஷமாவே புதுக்கோட்டை எஸ்பி ஆபீஸ் படியேறி மனு கொடுத்தோம். அந்த போலீஸ்காரங்க மட்டும் அப்பவே ஆக்ஷன் எடுத்திருந்தா என் புருஷன் இன்னைக்கு உயிரோட இருந்திருப்பாரே என ராஜராஜனோட மனைவி கதறி அழுத அந்த அழுகை அங்க இருந்த எல்லாரையுமே உலுக்கி எடுத்துருச்சு.
ராஜபாண்டியன் குடும்பத்தில இருக்கிற அந்த ஏழு பேரையும் கைது பண்ணாதான் உடலை வாங்குவோம் என ராஜராஜன் மனைவி ரொம்ப பிடிவாதமா நின்னாங்க. ஆனா விஷயம் சீரியஸ் ஆகுறத பார்த்துவிட்டு ராஜபாண்டியனோட மனைவி எனக்கு நெஞ்சு வலிக்குது எனச் சொல்லி ஒரு தனியார் ஆஸ்பத்திரிலயும் அவரோட அம்மா எனக்கு ஹார்ட் எல்லாம் படபடன்னு இருக்கு என ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிலயும் அட்மிட் ஆகி அந்த கைதுல இருந்து எஸ்கேப் ஆயிட்டாங்க. கடைசியில போலீஸ்காரங்க வந்து கொலையில ராஜபாண்டியன் மட்டும்தாங்க நேரடியா ஈடுபட்டிருக்கிறார்.

அவரை நாங்க கைது பண்ணிட்டோம். மத்தவங்களை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். தயவு செஞ்சு முதல்ல உடலை வாங்கி அடக்கம் பண்ணுங்கமா என பேச்சு வார்த்தை நடத்தி செப்டம்பர் நான்காம் தேதி
அன்னைக்கு சாயங்காலம் ராஜராஜனோட உடலை வடகாட்டுக்கு கொண்டு போனாங்க. அங்க மறைந்த அமைச்சர் வெங்கடாச்சலத்தோட நினைவிடம் பக்கத்துல ராஜராஜனை அடக்கம் பண்ண முயற்சி பண்ணாங்க.
ஆனா ராஜபாண்டியன் குடும்பத்தினர் ”எங்க அப்பா கல்லற பக்கத்துல அவனை அடக்கம் பண்ணக்கூடாது” எனஅதுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நின்னதுனால அடுத்து யாருக்கு அங்க என்ன நடக்குமோ தெரியலைன்னு வடகாடை இப்போ பயங்கர பதட்டத்துல இருக்கு.
