Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கிரிக்கெட் ஒருவரது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ, அதே அளவுக்கு அவரின் பொறுமையையும் சோதிக்கும் என மகன் அர்ஜுன் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இடம் பெற்றிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர், நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் போட்டியாக களமிறங்கினார்.

இந்நிலையில், மகனை வாழ்த்தி சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:

“கிரிக்கெட் ஒருவரது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ, அதே அளவுக்கு அவரின் பொறுமையையும் சோதிக்கும். இவை அனைத்தையும் நீ அழகாக கையாண்டாய். இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் நீ நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

வாய்ப்புக்காக கடைசி போட்டி வரை காத்திருந்த நீ, விளையாட்டின் மீது கொண்டிருக்கும் பணிவு மற்றும் காதலுடன் எப்போதும் பயணிக்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago